ஐசிஐசிஐ வங்கி 
செய்திகள்

வங்கியில் பிக்ஸட் டெபாசிட் பண்ணியிருக்கீங்களா? இதோ.. ஒரு குட் நியூஸ்!

கல்கி டெஸ்க்

நாட்டின் பண வீக்கத்தை சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி கொண்டே வருகிறது. இதனால் பல வங்கிகளும் கடனுக்கான வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

 இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள்  தன் வங்கியில் செய்துள்ள ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு 0.30 சதவீதம் வரை வட்டியை உயர்த்தித் தருவதாக அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து 7 முதல் 29 நாட்கள் வரையிலான வைப்பு தொகைக்கு 3% வட்டியும், 1 வருடம் முதல் 15 மாதம் வரையிலான வைப்புத் தொகைக்கு  6.10% வட்டித் தொகையும் 2 ஆண்டு முதல் 3 ஆண்டு வரை 6.50% ஆகவும்  வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் சீனியர் சிட்டிசன்களின் வைப்பு தொகைகளுக்கு கூடுதல் வட்டி வழங்கப் படும் என்றும் இந்த புதிய வட்டி விகிதம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ஐசிஐசிஐ அறிவித்துள்ளது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT