கனமழை  
செய்திகள்

கனமழை எச்சரிக்கை: இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை!

கல்கி டெஸ்க்

தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது.அடுத்த 3 மணி நேரத்திற்குள் இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை

சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்தில், இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகப்பட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், கடலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

SCROLL FOR NEXT