செய்திகள்

ரயில் விபத்தை வைத்து விமானக் கட்டணத்தை உயர்த்தினால் கடும் நடவடிக்கை!

கல்கி டெஸ்க்

‘ஒடிசாவில் ஏற்பட்டிருக்கும் பயங்கர ரயில் விபத்தைக் காரணமாக வைத்து பொதுமக்களிடம் விமானக் கட்டணத்தை அதிகமாக வசூலிக்கக் கூடாது‘ என்று விமானப்போக்குவரத்து த் துறை அமைச்சகம் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.

இதுகுறித்து, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், விமான நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறது. அதில், ‘ஒடிசாவில் நிகழ்ந்திருக்கும் துரதிஷ்டவசமான ரயில் விபத்தைக் காரணம் காட்டி, புவனேஸ்வர் மற்றும் மாநிலத்தின் மற்ற விமான நிலையங்களில் இருந்து புறப்படும் விமானங்களின் கட்டணங்கள் உயர்த்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். அப்படிக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி, ரயில் விபத்து சம்பவத்தால் விமான சேவை ரத்து செய்யப்பட்டாலோ அல்லது மாற்றப்பட்டாலோ எந்தவித கூடுதல் கட்டணத்தையும் பயணிகளிடம் இருந்து விமான நிலையங்கள் வசூலிக்கக் கூடாது’ என்றும் அதில் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

ஒடிசாவின் பாலாசோர் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இந்த விபத்தில் இன்று மாலை நிலவரப்படி 288 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 747 பேர் காயமடைந்து இருப்பதாகவும், அதில் 56 பேர் பலத்த காயமடைந்து இருப்பதாகவும் இந்தியன் ரயில்வே நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது. இந்த விபத்துப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ‘இது ஒரு துயரமான சம்பவம். காயமடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளும் அரசு வழங்கும். இந்த விபத்து குறித்து ஒவ்வொரு கோணத்திலும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இதில் தவறிழைத்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்’ என்று தெரிவித்து இருக்கிறார்.

பஜாஜ் பல்சரின் 400 சிசி புதிய பைக் அறிமுகம்: இனிமே செம ஸ்பீடு தான்!

திருமண வாழ்க்கை சிதையாமல் இருக்க சில சிம்பிள் யோசனைகள்!

சில்லரை விற்பனை மையங்களில் ஸ்மார்ட்போன் விற்பனை உயர்ந்தது! ஆச்சரியத்தில் ஃபிளிப்கார்ட், அமேசான்!

முருங்கையில் மதிப்புக் கூட்டு பயிற்சி: விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க!

குழந்தைப் பேறு வரம் அருளும் அபூர்வ விருட்சம் அமைந்த கோயில்!

SCROLL FOR NEXT