two wheeler
two wheeler 
செய்திகள்

டூ-வீலர் வாங்கணுமா? சீக்கிரம் போங்க.. விலை ஏறப் போகுது!

கல்கி டெஸ்க்

இந்தியாவில் தங்கள் நிறுவன தயாரிப்புகளான ஸ்கூட்டர் மற்றும் பைக் போன்ற இருசக்கர வாகனங்களின் விலையை அதிகரிக்கப் போவதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் உற்பத்தி செய்து வரும் பன்னாட்டு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இயங்கி வருகிறது. முன்னதாக, ஹீரோ ஹோண்டா என்ற பெயரில் கூட்டு நிறுவனமாக செயல்பட்ட இந்நிறுவனங்கள், இப்போது தனித்தனியே பிரிந்து உற்பத்தி பணிகளை கவனித்து வருகின்றன.

இந்நிலையில் ஹீரோ நிறுவனம், கடந்த செப்டம்பரில் தமது டூ-வீலர் தயாரிப்புகளான  ஸ்பிளென்டர், எக்ஸ்பல்ஸ், எக்ஸ்ட்ரீம், மேஸ்ட்ரோ உட்பட பல்வேறு வாகனங்களின் விலையை 1000 ரூபாய் வரை உயர்த்தி இருந்தது. இந்த நிலையில் மீண்டும் விலையை உயர்த்தி உள்ளது. இந்த புதிய விலை உயர்வு அதிகபட்சமாக 1500 ரூபாய் வரை இருக்கும் என தெரிவித்துள்ளது.

இந்த விலை உயர்வு மாடல் மற்றும் ரேஞ்ஜை பொறுத்து மாறுபடும். இந்த விலை உயர்வு வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும், ஒட்டுமொத்தமாக உற்பத்தி செலவு வீதம் அதிகரித்ததுதான் இந்த விலை உயர்வுக்கு காரணம் எனவும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

லகு நாரியல் என்றால் என்னவென்று தெரியுமா?

அனைத்திலும் வல்லுனராக இருப்பதற்கு எலான் மஸ்க் கூறும் தந்திரங்கள்! 

Future Of Gaming: மாற்றங்களும், புதுமைகளும்!

சிறுகதை – காரணம்!

சத்தான ஈவினிங் ஸ்நாக்ஸ்! வெரைட்டி சுண்டல் ரெசிபிஸ்!

SCROLL FOR NEXT