செய்திகள்

ஈரானில் ஹிஜாப் அணியாத காரணத்தால் அரசின் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இரண்டு பிரபல நடிகைகள்!

கார்த்திகா வாசுதேவன்

பெண்களுக்கான ஆடைக் குறியீட்டை மீறும் படங்களை வெளியிட்டதற்காக ஈரான், இரண்டு பிரபல நடிகைகள் மீது குற்றம் சாட்டியுள்ளது, அந்த இரு பெண்களின் மீதும் மீறல்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை அறிவித்த சில வாரங்களுக்குப் பிறகு, அங்குள்ள உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெஹ்ரானில் உள்ள காவல்துறை, கட்டயோன் ரியாஹி மற்றும் பாண்டேயா பஹ்ராம் ஆகியோருக்கு எதிரான வழக்கை ஈரானின் நீதித்துறைக்கு பரிந்துரைத்துள்ளது, அவர்கள் "பொதுவில் ஹிஜாபை அகற்றியது மற்றும் இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டது குற்றம்" என்று குற்றம் சாட்டியதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் திங்கள்கிழமை பிற்பகலில் தெரிவித்துள்ளது.

இந்தக் குற்றம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டால், இந்த இரூ நடிகைகளும் அபராதம் அல்லது சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.

ஈரானின் கட்டாய ஆடைக் குறியீட்டை மீறும் பெண்களை ஒடுக்க பொது இடங்களில் "ஸ்மார்ட்" தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப் போவதாக இந்த மாத தொடக்கத்தில் ஈரான் போலீசார் தெரிவித்தனர்.

கடந்த வாரம், 53 வயதான நடிகை பஹ்ராம், திரைப்படத் ரிலீஸ் விழா ஒன்றில் முக்காடு அணியாமல் போஸ் கொடுத்ததால், அவரது புகைப்படங்கள் வைரலானது, அதே நேரத்தில் 61 வயதான ரியாஹி, தெஹ்ரானைச் சுற்றியுள்ள பொது இடங்களில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை வெளியிட்டார், அதில் அவர் தலையில் முக்காடு அணியவில்லை.

1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு பெண்கள் பொது இடங்களில் முக்காடு அணிய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.

ஈரானில் ஆடைக் குறியீட்டை மீறியதாகக் கூறப்படும் 22 வயது குர்திஷ்-ஈரானிய இளம்பெண்ணான மாஷா அமினி (22) காவலில் வைக்கப்பட்ட செப்டம்பர் 16-ஐத் தொடர்ந்து அங்கு ஆடைக்கட்டுப்பாட்டை கடுமையாக எதிர்த்துப் போராடும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துள்ளது.

ஏப்ரல் 16 அன்று, ஊழியர்கள் ஆடைக் குறியீட்டிற்கு இணங்காத 150 வணிக நிறுவனங்களை மூடிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பஹ்ராம் மற்றும் ரியாஹி இருவருமே ஈரானின் முன்னணி சினிமா நிகழ்வான ஃபஜ்ர் சர்வதேச திரைப்பட விழாவில் பல விருதுகளை வென்றுள்ளனர்.

நவம்பரில், அமினி எதிர்ப்புக்களுக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டதற்காக ஒரு வாரத்திற்கும் மேலாக தடுப்புக்காவலுக்குப் பிறகு ரியாஹி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் இதுபோன்ற படங்களை வெளியிட்ட முதல் ஈரானிய நடிகை இவர்தான்.

iPad Mini: 2024 இறுதிக்குள் அறிமுகமாகும் ஆப்பிள் சாதனம்! 

கோயில் செல்லும்போது அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய ஆன்மிகத் தகவல்கள்!

ஏடிஎம் திருட்டு – பணத்தைப் பாதுகாக்க பத்து வழிகள்!

கொளுத்தும் வெயிலிலும் ஒரு நன்மை இருக்கிறது; எப்படி தெரியுமா?

அரிசோனா பாலைவனத்தில் பயிற்சி செய்யும் நாசா...  காரணம் தெரிஞ்சா ஆடிப் போயிடுவீங்க! 

SCROLL FOR NEXT