அரிசி தவிடுனுடைய விலை உயர்வை அடுத்து ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக பாஸ்மதி இல்லாத அரிசி வகைகளின் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்து ஜூலை 20ஆம் தேதி உத்தரவிட்டது. இதனால் உலக நாடுகளில் உணவுப் பொருட்களினுடைய விலை அதிகரித்து வருகிறது. மேலும் அரிசி முக்கிய உணவுப் பொருள்களில் ஒன்றாக இருப்பதால் பல்வேறு நாடுகளில் அரசியை வாங்க கடுமையான போட்டிகள் நடைபெறுகிறது.
இதனைத்தொடர்ந்து சர்வதேச நிதியம் அரசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள இந்தியா அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.இந்த நிலையில் கால்நடைகளுக்கு வழங்கப்படும் தீவனங்களின் விலை இந்தியாவில் கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக அரிசி தவிடு இருப்பு குறைவாக இருப்பதாலும், விலை அதிகமாக விற்கப்படுவதாலும் விவசாயிகள் பால் உற்பத்தியாளர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக எண்ணெய் எடுத்த பிறகு உள்ள அரிசி தவிடு மாடுகளுக்கான முக்கிய உணவு தீவனமாக உள்ளது. அரிசி தவிடை உண்ணுவதன் மூலம் பசுக்கள் அதிக அளவில் பால் கறக்க வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் பால் உற்பத்தியாளர்கள் மாடுகளுக்கு அதிக அளவில் அரிசி தவிடுகளையே தீவனமாக வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள உணவுப் பொருட்கள் மீதான தட்டுப்பாடு அரிசி தவிட்டினுடைய உற்பத்தியும் மிகப் பெரிய அளவில் பாதித்து இருக்கிறது. இதனால் அரிசி தவிடு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் கால்நடைகளுக்கான பாதிப்படைந்துள்ளன.
இதை அடுத்து இந்தியா அரிசி தவிடு ஏற்றுமதியை முழுமையாக தடை செய்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அரிசி தவிடு விலை சிறிதளவு கட்டுக்குள் வர வாய்ப்புள்ளது.