Indian Passengers. 
செய்திகள்

இந்தியர்கள் சென்ற விமானத்தில் ஆள் கடத்தல்.. நடந்தது என்ன?

கிரி கணபதி

300க்கும் மேற்பட்ட இந்தியர்களை ஏற்றிக்கொண்டு சென்ற விமானத்தில் அட்கடத்தல் நடந்ததாகக் கூறி, பிரான்ஸ் நாட்டில் போலீசார் விசாரணை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் வேலை, படிப்பு, சுற்றுலா தொடர்பாக உலகில் உள்ள பல நாடுகளுக்குச் செல்வது வாடிக்கை. அதிலும் கடந்த சில ஆண்டுகளாக இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது அதிகரித்துள்ளது. இந்நிலையில் 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை ஏற்றிக்கொண்டு நிகரகுவா என்ற நாட்டிற்கு சென்ற விமானத்தில் ஆள்கடத்தல் சம்பவம் நடந்துள்ளதாக சந்தேகித்த பிரான்ஸ் போலீசார், உடனடியாக விமானத்தை தரையிறக்கி விசாரணை மேற்கொண்டு இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர். 

அந்த விமானத்தில் ஆட்கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து நிரகுவாவிற்கு ஏர்பஸ் ஏ340 என்று விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பிரான்ஸ் நாட்டில் சில காரணங்களுக்காக அது தரையிறக்கப்பட்டது. 

போலீசாருக்கு அந்த விமானத்தில் சில பயணிகள் கடத்தப்படுகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததால், விமானத்தை தரையிறக்கி பிரான்ஸ் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் சந்தேகத்திற்கு இடமான இரண்டு பேரை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களிடம் விசாரணை நடத்த இந்திய தூதரகம் அனுமதி அளித்துள்ளதாகவும் பிரான்ஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். 

இதுகுறித்து இந்திய தூதரகம் தரப்பில் என்ன கூறப்படுகிறது என்றால், “துபாயிலிருந்து நிகரகுவா நாட்டிற்குச் சென்ற விமானம் பிரான்ஸ் விமான நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளதாக எங்களிடம் அதிகாரிகள் கூறினார்கள். அவர்களை விசாரிக்க எங்களிடம் அனுமதி கோரியிருந்தனர். அதன் உண்மைத் தன்மையை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். பயணிகளின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்” என பதிவிட்டுள்ளனர். 

சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழையவே இந்த பயணிகள் நிகரகுவா நாட்டிற்கு செல்கிறார்கள் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனால் அதிலிருந்த பயணிகள் அனைவரிடமும் விசாரணை நடத்தியதில் அவர்களில் இரண்டு பேர் மட்டும் சந்தேகத்திற்கு இடமான முறையில் வழக்கத்திற்கு மாறாக பதில் அளித்ததால், அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

அதுவும் இரவு முழுவதும் விடிய விடிய 303 இந்தியர்களும் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்கள் எப்போது மீண்டும் கிளம்புவதற்கு அனுமதி வழங்கப்படும் என்பது தெரியவில்லை. பிரான்ஸ் நாட்டின் சட்ட விதிகளின்படி சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டவர்களை நான்கு நாட்கள் வரை அந்த நாட்டிலேயே காவலில் வைக்க முடியும். இதுதவிர நீதிபதியின் ஒப்புதலுடன் அதிகபட்சமாக 26 நாட்கள் வரை ஒருவரை போலீசார் நிறுத்தி வைக்க முடியும். 

துணிந்தாருக்கு துக்கம் இல்லை!

இயற்கையிடம் சுறுசுறுப்பை கற்றுக் கொள்ளுங்கள்!

தலைக்கு ஷாம்பு பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க!

வாழ்க்கை என்பது கொடுக்கல் வாங்கல் மட்டுமல்ல…

புடவைக் கட்டும் பொழுது பெண்கள் செய்யக்கூடாத 9 தவறுகள்!

SCROLL FOR NEXT