செய்திகள்

கெஜ்ரிவால் இல்லம் புதுப்பிப்பு குறித்து மத்திய கணக்கு தணிக்கை குழு ஆய்வு செய்யும் என தகவல்!

ஜெ.ராகவன்

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லம் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது குறித்து மத்திய கணக்குத் தணிக்கைக் குழு ஆய்வு செய்யும் என்று மத்திய அரசு வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

கெஜ்ரிவால் வீட்டை புதுப்பிப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளன, விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இது குறித்து விசாரண நடத்தப்பட வேண்டும் என்று தில்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்ஸேனா, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில் இது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனிடையே மத்திய அரசு, எதிரிகளை குறிவைத்து பழிவாங்கு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.

தில்லியில் நடைபெற்ற தேர்தல்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்து வந்த பா.ஜ.க., விரக்தியின் உச்சிக்கு சென்று எதேச்சாதிகார போக்கில் செயல்பட்டு வருகிறது. மேலும் நேர்மையான முறையில் செயல்பட்டு வரும் ஆம் ஆத்மி அரசின் புகழை கெடுத்து, கொல்லைப்புற வழியாக அதிகாரத்தை கைப்பற்ற பா.ஜ.க. துடிப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

பா.ஜ.க. ஆட்சி நடந்தி வரும் மாநிலங்களில் நடைபெறும் ஊழல்கள் பற்றி மத்திய அரசு கவனம் செலுத்தாதது ஏன் என்றும் ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியுள்ளது.

தில்லி சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள முதல்வர் கெஜ்ரிவாலின் அதிகாரபூர்வ இல்லத்தை புதுப்பிக்க கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. விலை உயர்ந்த மார்பிள்கள் பதிக்கப்பட்டுள்ள. திரைச்சீலைகள் போடப்பட்டுள்ளன. புதுப்பிப்பு என்ற பெயரில் வீட்டையே முழுமையாக மாற்றியமைத்துள்ளனர். பொதுப் பணித்துறையினர் மூலம் இவை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் முறைகேடுகளும் விதிமீறல்களும் நடந்துள்ளன.

வீட்டை புதுப்பிக்கும் பணிக்கு முறையாக அனுமதி பெறவில்லை. மேலும் ரூ.15 முதல் ரூ.20 கோடி செலவாகும் என்று கூறிவிட்டு இப்போது ரூ.53 கோடி செலவிட்டுள்ளனர் என்றும் துணைநிலை ஆளுநர் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டில் விலை உயர்ந்த சலவைக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. மரவேலைப்பாடுகளுடன் அலமாரிகள் அமைக்கப்பட்டுள்ளன. விலை உயர்ந்த திரைச்சீலைகள் போடப்பட்டுள்ளன. வீட்டை புதுப்பிக்கிறேன் என்ற பெயரில் கோடிக்காண ரூபாய்களை வாரி இறைத்துள்ளனர் என்று பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சம்பித் பாத்ரா குற்றஞ்சாட்டியுள்ளார்.

கெஜ்ரிவால் இருந்த அரசு இல்லம் மிகவும் பாழடைந்த நிலையில் இருந்ததால்தான் அதை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. வீட்டின் சுவர்கள் பெயர்ந்து விழும் நிலையில் இருந்தன. மழைக்காலத்தில் வீட்டின் மேற்கூரைகள் ஒழுகும் நிலையில் இருந்தது என்று ஆம் ஆத்மி கூறி அது தொடர்பான விடியோக்களையும் வெளியிட்டிருந்தது.பிரதமர் கூட தனது வீட்டை ரூ.90 கோடி செலவில் புதுப்பித்துள்ளதாக ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் குறிப்பிட்டுள்ளார்.

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

SCROLL FOR NEXT