செய்திகள்

இனி ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் சலுகை ரத்து: இன்போசிஸ் அதிரடி!

கல்கி டெஸ்க்

இன்போசிஸ் ஊழியர்கள் இனி வாரத்தில் 5 நாளும் அலுவலகத்திற்கு வந்து பணியை துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதியை மீறும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது இன்போசிஸ் நிறுவனம் .

இன்போசிஸ் நாராயணமூர்த்தி 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இளம் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதை சரியானது இல்லை, இதற்கு எதிராக அவர்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். டெக் நிறுவனங்களில் மூன்லைட்டிங் பிரச்சனை மிகவும் மோசமாக இருந்த காலக்கட்டத்தில் இதை பேசினார் நாராயணமூர்த்தி.

இதற்கு ஏற்றார் போல் மார்ச் காலாண்டு முடிவுகள் வெளியான பின்பு இன்போசிஸ் நிர்வாகம் ஊழியர்கள் செயல்திறன் குறைவாக உள்ளது இதை மேம்படுத்த விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியது. இதன் வாயிலாக இன்போசிஸ் தனது ஊழியர்களை வாரத்தில் 3 நாள் அலுவலகம் வருவதை 80 சதவீத ஊழியர்களுக்கு கட்டாயமாக்கி, நடைமுறைப்படுத்தியது.

இதை தொடர்ந்து தற்போது அமெரிக்கா, கனடாவில் இருக்கும் சுமார் 30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் சலுகையை நிரந்தரமாக ரத்து செய்துள்ளது. இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்களை படிப்படியாக ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வரும் வேளையில், நாட்டின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் தனது அமெரிக்க ஊழியரின் வொர்க் ப்ரம் ஹோம் குறித்து முக்கிய முடிவை எடுத்துள்ளது.

இன்போசிஸ் நிர்வாகம் கொரோனா காலத்தில் தனது ஊழியர்களுக்கு கொடுத்த வொர்க் ப்ரம் ஹோம் சலுகையை தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி இன்போசிஸ் நிர்வாகம் அதன் அமெரிக்கா, கனடாவில் இருக்கும் ஊழியர்கள் நீக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

அமெரிக்கா, கனடாவில் இருக்கும் இன்போசிஸ் ஊழியர்கள் வாரத்தில் 5 நாளும் அலுவலகத்திற்கு வந்து பணியை துவங்க உத்தரவிட்டுள்ளது. இந்த விதியை மீறும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது, இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் அமெரிக்கா, கனடாவில் இருக்கும் சுமார் 30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் நிரந்தரமாக திரும்பப்பெறப்பட்டு உள்ளது.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT