செய்திகள்

பிரெஷர்ஸ்களை (Freshers) தூக்கிய இன்போசிஸ் நிறுவனம்? ரெஸிஷன் இந்திய ஐடி துறையையும் பதம் பார்க்குமா?

கல்கி டெஸ்க்

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ் இன்று அதிர்ச்சி அளிக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதிலும் இருக்கும் சாப்ட்வேர் நிறுவனங்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு ஐடி ஊழியர்களை பயமுறுத்தி வரும் நிலையில், இது இந்திய ஐடி சேவைத் துறையைப் பாதிக்குமா? என்ற கேள்வி அனைவருக்கும் இருந்தது.

இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் 600 பேரின் பணி நீக்க அறிவிப்பு வெளியாகி ஐடி ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த 600 பெரும் புதியதாக பணியில் சேர்ந்த பிரஷ்ஷர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இன்போசிஸ் சுமார் 600 பிரஷ்ஷர்களை இந்தத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இது பொதுவாக ஒவ்வொரு வருடமும் நடப்பது தானே என்று கூறினாலும் எண்ணிக்கை அளவில் மிகவும் அதிகம்.

இன்போசிஸ் நிறுவனத்தில் பணியில் கல்லூரியில் பட்டம் பெற்று நேரடியாகப் பிரஷ்ஷர் ஆகச் சேருவோருக்கு சில மாத பயிற்சிக்கு பின்பு Fresher Assessment (FA) டெஸ்ட் வைக்கப்படும்.

இந்தத் தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள். 150 பேர் கொண்ட அணியில் 60 பேர் மட்டுமே Fresher Assessment (FA) டெஸ்ட்-ல் தேர்வான நிலையில் மற்ற அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ஜூலை 2022ல் சேர்ந்த பேட்சில் 150 பேர் இருந்த நிலையில் இதில் 85 பேர் தேர்ச்சி அடையாத காரணத்தால் 2 வாரம் நோட்டீஸ் கொடுத்துப் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த வாரம் சுமார் 208 பேர் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தில் சுமார் 600 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியானது.

இன்போசிஸில் தற்போது பணியில் இருக்கும் ஐடி ஊழியர்களை இது பாதிக்காது என்றாலும் ரெசிஷன் மற்றும் ஐடி துறையில் இருக்கும் மந்தநிலையின் எதிரொலியாகவே இன்போசிஸ் நிறுவனத்தின் 600 பேரின் பணிநீக்கம் பார்க்கப்படுகிறது.

l

கோடை காலத்திற்கான (அக்னி நட்சத்திரம்) ஆரோக்கிய குறிப்புகள்!

உங்க அறைக்கு எத்தனை டன் ஏசி வாங்கணும்னு தெரியலையா? அப்போ இதை முழுசா படிங்க!

சிறுகதை; தென்னை மரமும், வாழை மரமும்!

தயக்கம் இருக்க வேண்டியது எதில் தெரியுமா?

கோடை வெயிலில் இருந்து தப்பிக்க லஸ்ஸி வகைகள் செய்யலாம் வாங்க!

SCROLL FOR NEXT