பலூன் திருவிழா 
செய்திகள்

பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா!

கல்கி டெஸ்க்

தமிழகத்தில் கோவை மாவட்டம்  பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழாவை ஜனவரி 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பொள்ளாச்சியில் கடந்த சில வருடங்களாக சர்வதேச பலூன் திருவிழா நடத்தப் பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான பலூன் திருவிழாவை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, வருகிற ஜனவரி மாதம் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக  தமிழக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

பொள்ளாச்சியில் நடைபெறவுள்ள இந்த பலூன் திருவிழாவில் அமெரிக்கா, மெக்ஸிகோ, ஜெர்மனி உள்ளிட்ட 8 நாடுகள் பங்குகொள்கின்றன.

இந்நாடுகள் சார்பாக மெகா சைஸ் ஹாட்-ஏர் பலூன்கள் சுமார் 10 பறக்கவிட திட்டமிடப் பட்டுள்ளன. இதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பலூன் பைலட்கள் பொள்ளாச்சிக்கு வருகைதர உள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடக்கும் இந்த பலூன் திருவிழாவில் காலையிலும் மாலையிலும் இந்த பலூன்கள் பறக்க விடப்படும். அவற்றில் பொதுமக்கள் ஏறிச் சென்று ரவுண்டு போய் வரலாம். இத்திருவிழாவில் சுமார் 50 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

-இவ்வாறு சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT