Joe Biden 
செய்திகள்

முடிவுக்கு வருகிறதா இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர்? ஜோ பைடன் கூறியது என்ன?

பாரதி

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் பல மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் போரை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் இது என்று கூறியிருக்கிறார்.

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடந்த 8 மாதங்களாக போர் நடத்தி வருகிறது. இதில் இதுவரை மொத்தம் 36 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையே பல உலக நாடுகள் போரை நிறுத்த வேண்டும் என்று கூறின. ஆனால், இஸ்ரேல் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை, ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக ஒழித்துக்கட்டும்வரை ஓயமாட்டோம் என்று கூறியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இஸ்ரேல், காசாவின் எல்லைப் பகுதியான ரஃபா பகுதியில் தாக்குதலை நடத்தியது. இதில் பல கொடூரச் சம்பவங்களும் நிகழ்ந்தன.

குழந்தைகள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தினால், உலக முழுவதும் All eyes on Rafah என்றப் பதிவு அதிக அளவு பகிரப்பட்டது. இஸ்ரேலுக்கு எதிராக உலக மக்கள் பதிவிடுகின்றனர் என்பதால், இஸ்ரேல் அதனைக் கருத்தில்கொண்டு கொஞ்சம் இறங்கி வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இஸ்ரேல் இன்னும் 7 மாதங்கள் போர் நடைபெறும் என்று அடித்துக் கூறிவிட்டது. 

இது ஒரு பக்கம் இப்படி இருக்க, சென்ற ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் மனமுடைந்துப் போன ஹமாஸ் அமைப்பு, ஒப்பந்தத்தின் அடிப்படையில் போரை நிறுத்தலாம் என்று முன்மொழிந்தது. இந்த நிலையில், காசாவில் உள்ள மக்களுக்கு எதிரான போர் மற்றும் ஆக்கிரமிப்பை நிறுத்தினால் முழுமையான உடன்படிக்கைக்கு தயாராக இருப்பதாக ஹமாஸ் தெரிவித்தது. எங்கள் மக்கள் மீது இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலின் இந்த செயல்முறையை ஹமாஸ், பாலஸ்தீனிய அமைப்புகள் ஏற்காது என்று பேசியது.

அதேபோல் இஸ்ரேலும் போரை நிறுத்த முன் வருவதாக தெரிவித்தது என சொல்லப்படுகிறது.

இதுகுறித்து ஜோ பைடன் பேசியதாவது, “இதுதான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம். ஹமாஸ் இந்த போர் நிறுத்தம் முன்மொழிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். இஸ்ரேல் முன்மொழிந்துள்ள திட்டத்தின் படி, ஆறு வார காலத்திற்குள் படிப்படியாக மக்கள் மிகுந்த இடத்தில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறும். போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்துவதற்கான இந்த வாய்ப்பை தவற விட்டு விடக்கூடாது. இஸ்ரேல் விரிவான சண்டை நிறுத்தம் கொண்டு வருவதற்கும் பினையக்கைதிகளை விடுவிப்பதற்கான விரிவான திட்டம் இதுவாகும்.

அதாவது காசாவில் முழுமையான சண்டை நிறுத்தம், காசாவில் மக்கள் நிறைந்த பகுதிகளில் இருந்து படைகளை திரும்ப பெறுதல், பினைக்கைதிகளை விடுவிப்பது என இதற்கு ஈடாக பாலஸ்தீனிய சிறைக்கைதிகளை இஸ்ரேல் விடுவிப்பது ஆகியவை இந்த 6 வார காலக்கட்டத்தில் நடைபெறும். இந்த ஆறு வார காலக்கட்டத்தில் இஸ்ரேலும் பாலஸ்தீனமும் போர் நிறுத்தத்தை நீடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தால், சண்டை நிறுத்தம் தொடரும். போர் நடக்காது. ஹமாஸ் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்." என கூறினார்.

என்னை துறந்து சென்றவனும் என்னால் துறக்கப்பட்டவனும்!

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் சமையல் எண்ணெய்கள்!

இந்த ரகசியம் மட்டும் தெரிஞ்சா இனி குளிர்ந்த நீரில்தான் குளிப்பீங்க! 

கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு ஏற்றுவது ஏன் தெரியுமா?

இளம் வயதினரைத் தாக்கும் புற்று நோய்கள் என்னென்ன தெரியுமா? 

SCROLL FOR NEXT