Google vs open ai 
செய்திகள்

Googleக்கு போட்டியா இந்த Open AI?

சுடர்லெட்சுமி மாரியப்பன்

Google தேடுபொறிக்கு போட்டியாக, ChatGPTல் இணையதள தேடலை அறிமுகம் செய்துள்ளது Open  AI நிறுவனம். இன்றைய இணையதள தேடல் என்பது அன்றாட தேவையில் மிகவும் முக்கியமாகத் திகழ்கிறது. ஒரு நொடிக்குள் Googleல்  கோடான கோடி தேடல்கள் நடந்து வருகின்றன. அந்த அளவு தினசரி பயன்பாட்டில் இருக்கும் கூகுள் தேடுபொறிக்கு போட்டியாக, தற்போது ChatGPTல் இணையதள Searchனை அறிமுகம் செய்துள்ளது Open AI நிறுவனம்.

கடந்த 2022ம் ஆண்டின் இறுதியில் Open AI நிறுவனம் சாட்-ஜிபிடி எனும் ஜெனரேட்டிவ் AI சாட்பாட்டை அறிமுகம் செய்தது. அது டிஜிட்டல் பயனர்கள் மத்தியில் அதீத வரவேற்பைப் பெற்றது. கிட்டத்தட்ட ஜெனரேட்டிவ் ஏஐ பயன்பாடு சார்ந்த புரட்சியை அது ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது  ChatGPTல் நிகழ்நேர தகவல்களைப் பெறும் வகையில் Searchனை Open AI வெளியிட்டுள்ளது.

தற்போதைக்கு இதனை சந்தா கட்டணம் செலுத்தி மட்டுமே பயன்படுத்த முடியும். விரைவில் அனைவரின் பயன்பாட்டுக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் 'ப்ரிவியூ வெர்ஷன்' கூட கடந்த ஜூலையில் SearchGPT என்ற பெயரில் மாதிரி வடிவமாக வெளியானது. அதனை கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் குறைவான பயனர்களே பயன்படுத்த முடிந்தது.

முன்னணி உலக செய்தி நிறுவனங்களுடன் இணைந்து சாட்ஜிபிடி-யில் இணையதளத்தில் Search செய்யும் வகையில் வடிவமைத்துள்ளதாக பிளாக் பதிவில் Open AI நிறுவனம் வியாழன் அன்று தெரிவித்துள்ளது. இதில் பயனர்கள் தேடும் சோர்ஸ்களுக்கான லிங்க்குகள் மற்றும் செய்தி இணைப்புகள் இதில் இருக்கும் Open AI காட்டியுள்ளது. இதோடு சாட்பாட் தரும் தகவல்களையும் இதில் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் கூகுளுக்கு போட்டியாக இந்த இணைய உலகில் இது களம் கண்டுள்ளது. பயனர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்தே இதன் ரீச் இருக்கும் என கூறப்படுகிறது. chatgpt.com மூலம் டெஸ்க்டாப் மற்றும் மொபைல் செயலியில் இதனைப் பயன்படுத்த முடியும்.

உலக சிறுவர் கதைகள்: 4 - நிழல் பாவைக் கூத்து உருவான கதை! (சீனச் சிறுவர் கதை)

கம்பீருக்கு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அளித்த அறிவுரை… ஏற்றுக்கொள்வாரா கம்பீர்?

தன்னம்பிக்கையே தனிப் பெரும் வெற்றி!

குளிர்காலத்தில் நிமோனியா வரலாம்... ஜாக்கிரதை! 

என்னது? செல்லப் பிராணிகளுக்கும் நீரிழிவு நோய் வருமா?

SCROLL FOR NEXT