Has World War III begun?
Has World War III begun? 
செய்திகள்

இஸ்ரேலில் களமிறங்கும் அமெரிக்க வீரர்கள்... பாலஸ்தீனத்தில் தொடரும் போர் பதற்றம்!

கிரி கணபதி

ஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையேயான போரில் களமிறங்குவதற்கு 2000 அமெரிக்க வீரர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அமெரிக்க ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பாலஸ்தீனம் மீதான இஸ்ரோல் தாக்குதல் அதிகரிக்ககூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே நடக்கும் போரில் அமெரிக்க வீரர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ள நிலையில், இஸ்ரேல் படைகளுக்கு ஆயுதம் அல்லது மருத்துவ உதவி போன்ற பல்வேறு உதவிகளை அமெரிக்க படை வீரர்கள் வழங்குவார்கள் எனக் கூறப்படுகிறது. மேலும் அவசியம் ஏற்பட்டால் பல்வேறு இடங்களைப் பிடிப்பது, தாக்குதல் நடத்துவது, பாதுகாப்பு வழங்குவது போன்ற பணிகளிலும் இஸ்ரேலுக்கு அமெரிக்க படைகள் ஆதரவாக இருக்கும். 

அமெரிக்க படைகள் இஸ்ரேலுக்கு மட்டுமின்றி சிரியா, எகிப்து, காசா உள்ளிட்ட நாடுகளுக்கும் அனுப்பப்படும் வாய்ப்புள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க படைகள் அங்கே குவிக்கப்பட்டு இஸ்ரேலுக்கு போரில் மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவும் வகையில் அவர்கள் செயல்படுவார்கள். 

இதற்கு முன்னதாக இஸ்ரேலுக்கு பக்கபலமாக அமெரிக்கா தன் ராணுவக் கப்பலை அனுப்பி இருந்தாலும், நேரடியாக களத்தில் இறங்கவில்லை. ஆனால் தற்போது அமெரிக்க ராணுவம் நேரடியாக களத்தில் இறங்க உள்ளதால் அமெரிக்காவுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையேயான மாபெரும் போராக இது உருவெடுக்கும் எனக் கூறுகிறார்கள். 

தனது ராணுவ வீரர்களை தயார் நிலையில் இருக்கும்படி அமெரிக்க அதிபர் ஜோபேடன் பிறப்பித்த உத்தரவின் பேரிலேயே அவர்களுக்கு இந்த அறிவிப்பு சென்றுள்ளது. பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலில் போர் உச்சமடைந்துள்ளதால் இந்த அறிவிப்பை தற்போது அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் போரில் அமெரிக்கா நேரடியாக தலையிடுவதற்கு தயாராகிவிட்டது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான போரில் அமெரிக்கா மூக்கை நுழைத்திருப்பது உலக நாடுகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

செம டேஸ்டான 'தேங்காய் போளியும் வெண்டைக்காய் பகோடாவும்' செய்யலாம் வாங்க!

போலி நண்பனின் 6 அறிகுறிகள்… அவர்களைக் கண்டறிந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

நுகர்ந்தாலே மருத்துவப் பலன்களை அள்ளித் தரும் பச்சை கற்பூரம்!

வீட்டின் எந்தப் பகுதியில் இன்வெர்ட்டரை வைக்க வேண்டும்?

நீரிழிவு நோயாளிகளும் ராஸ்பெர்ரி சாப்பிடலாமா?

SCROLL FOR NEXT