People Fled 
செய்திகள்

Isreal Gaza War: ரஃபாவில் இஸ்ரேலின் தாக்குதல் தீவிரம்… வெளியேறும் 8 லட்சம் பாலஸ்தீனர்கள்!

பாரதி

ரஃபா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தற்போது மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதனையடுத்து, 8 லட்சம் மக்கள் தங்கள் உயிருக்கு பயந்து ரஃபாவிலிருந்து வெளியேறியுள்ளனர்.

பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க ஹமாஸ் என்ற அமைப்பு செயல்படுகிறது. ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானில் இருந்து வருகிறது. இந்த இரு அமைப்புகளையும் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத பட்டியலில் இணைத்துள்ளனர்.

ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதுமுதல், இஸ்ரேல் கொடூரமான பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்கா கூட போரை நிறுத்துமாறு கூறிவிட்டது. ஆனால், இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என்று சொல்லிவிட்டத்தால், தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது.

கிட்டத்தட்ட 200 நாட்களாக இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தில் இருந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள், 75% பேர் குழந்தைகள் என பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

சமீபத்தில் கூட, ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்தத்திற்கு ஒப்பந்தம் தெரிவித்தது. ஆனால், இஸ்ரேல் தரப்பு அதனைப் பற்றி வாயையே திறக்கவில்லை. அதேபோல், பாலஸ்தீனம் ஐநாவின் நிரந்தர உறுப்பினரானது. இந்தியா, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்குப் பதிவிட்டது. ஆனால், அமெரிக்கா பாலஸ்தீனத்திற்கு எதிராக வாக்குப்பதிவிட்டது.

இருப்பினும், அதிக ஓட்டுகளுடன் பாலஸ்தீனம் ஐநாவின் உறுப்பினரானது. ஐநா, மனிதாபிமானத்தின் அடிப்படையில் போரை நிறுத்த வலியுறுத்தியது. இருப்பினும், ரஃபாவில் இஸ்ரேல் மோசமான தாக்குதலை நடத்தத் திட்டமிட்டது. காசாவின் உள்ளே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், பாலஸ்தீன மக்கள் ரஃபா நோக்கிதான் நகர்ந்தனர். பின்னர், இந்த பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை திட்டமிட்டப்படி தொடங்கியது.

இங்கு மொத்தம் 10-15 லட்சம் பாலஸ்தீன மக்கள் இருக்கிறார்கள். இவர்கள் இங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தி வருகிறது. எனவே, மக்கள் இங்கிருந்து தற்போது வெளியேறி வருகின்றனர். அதாவது காசாவின் உள்ளே இருக்கும் இடங்களுக்கு மீண்டும் செல்ல தொடங்கியுள்ளனர். தற்போது வரை 8 லட்சம் பேர் மீண்டும் போர் நடந்து முடிந்த பூமியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றனர் என்று ஐநா தெரிவித்திருக்கிறது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT