சந்திரயான் - 3 செயற்கைக்கோள்
சந்திரயான் - 3 செயற்கைக்கோள் 
செய்திகள்

"முக்கிய கட்டத்தை எட்டியாச்சு" நிலவின் சுற்றுபாதைக்குள் நுழையும் சந்திராயன் 3!

விஜி

ந்திரயான் 3 விண்கலம் , இன்று நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்3 விண்கலம் கடந்த மாதம் 14ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது. முதலில், பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர் தொலைவும், அதிகபட்சம் 36 ஆயிரத்து 500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சந்திரயான் 3 விண்கலம் சுற்றத்தொடங்கியது.

இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலத்தை நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. புவி வட்டப்பாதையின் இறுதிச்சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்த விண்கலம் கடந்த ஒன்றாம் தேதி நிலவின் சுற்றுப்பாதையை நோக்கிய பயணத்தை தொடங்கியது.
நிலவை நோக்கிய பயணத்தில் மூன்றில் இரண்டு பங்கை சந்திரயான்-3 விண்கலம் நிறைவு செய்துள்ளது.

இந்த நிலையில் நிலவை நோக்கிய பயணத்தின் அடுத்தகட்டமாக இன்றிரவு சந்திரயான்-3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழையும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இரவு 7 மணிக்கு நிலவின் சுற்றுப்பாதைக்குள் செல்லும் முக்கிய கட்டத்தை சந்திரயான்-3 நெருங்கும் என கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் சந்திராயன்-3 லேண்டரை சாஃப்ட் லேண்டிங் முறையில் தரையிறக்க  இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

தினத்தந்தி ஆகஸ்ட் 5, 5:49 am 6-வது கட்டத்தில் இருந்துதான் சந்திரயான்-3 விண்கலத்துக்கு அக்னி பரீட்சை ஆரம்பிக்க இருக்கிறது. இனி கடக்க இருக்கும் ஒவ்வொரு கட்டமும் சவாலானது.

கொன்றை பூவின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?

உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

SCROLL FOR NEXT