செய்திகள்

சுங்கச் சாவடி கட்டணம்; இன்றுமுதல் உயர்வு!

கல்கி

தமிழ்நாட்டில் இன்று முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு படுத்தப் பட்டுள்ளது.

தமிழகத்தில் செப்டம்பர் 1-ம்  தேதி முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்படுவதாக அரசு ஏற்கனவே அறிவித்த நிலையில், இன்றுமுதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில், இதுவரை கார், ஜீப், வேன் ஆகியவற்றுக்கு ரூ.90 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில்  தற்போது, ரூ.10 உயர்த்தப்பட்டு ரூ.100 வசூலிக்கப்படுகிறது. பஸ், லாரி போன்ற கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.310-ல் இருந்து ரூ.355 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி-திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை, கொடை டு-திண்டுக்கல்-புறவழிச்சாலை-சமயநல்லூர், மனவாசி- திருச்சி- கரூர், மேட்டுப்பட்டி-சேலம்-உளுந்தூர்பேட்டை, மொரட்டாண்டி- புதுச்சேரி- திண்டிவனம், நத்தக்கரை-சேலம்-உளுந்தூர்பேட்டை, ஓமலூர்-நாமக்கல், தர்மபுரி- கிருஷ்ணகிரி- தும்பிப்பாடி, பொன்னம்பலப்பட்டி-திருச்சி-திண்டுக்கல், புதூர்பாண்டியபுரம்-மதுரை-தூத்துக்குடி, சமயபுரம்-பாடலூர்-திருச்சி, செங்குறிச்சி-உளுந்தூர்பேட்டை-பாடலூர் உள்பட 20 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண முறை அமலுக்கு வந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் இந்த கட்டண உயர்வை திரும்பபெற வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT