செய்திகள்

3 மாவட்டங்களுக்கு கனமழை: ரெட் அலர்ட் எச்சரிக்கை!

கல்கி

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 3 மாவட்டங்களுக்கு கனமழை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது;

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும். மேலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும்  விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்தூத்துக்குடி, மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்  மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும்  விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களுக்கும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று கன்னியாகுமரி, வால்பாறை மற்றும் சில ஊர்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்மதுரையில் 23 செ.மீ, திருப்புவனம் 12 செ.மீ, திண்டுக்கல் 8 செ.மீ,  மற்றும் நீலகிரி, நாமக்கல் நாமக்கல், ஈரோடு,  தேனி ஆகிய ஊர்களில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

–இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சோயா பனீர் பிரியாணி செய்யலாம் வாங்க! 

காஃபின் கலந்திருக்கும் காபி தெரியும்; ‘டீகாஃப்’ என்றால் என்ன தெரியுமா?

இந்த 15 தவறுகளை செய்யாமல் இருந்தாலே நீங்கள் பணக்காரர் ஆகலாம்!

சிறுகதை: நாட்டு சர்க்கரை கடலை உருண்டை!

ஆண்களுக்கு எதிரான வன்முறைகளும் அவற்றை எதிர்கொள்ளும் விதங்களும்!

SCROLL FOR NEXT