செய்திகள்

ஓணம் பண்டிகை: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சர்ச்சை!

கல்கி

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்காமல், இன்று கேரளாவில் விமரிசையாகக் கொண்டாடப்படும் ஓணம் பன்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

-இதுகுறித்து தமிழக பாஜக சார்பில் தெரிவித்ததாவது;

தமிழக மக்கள் கொண்டாடும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காமல், கேரளா மக்களுக்கு மட்டும் ஓணம் பன்டிகை வாழ்த்து தெரிவிப்பதுதான் திராவிட மாடலா? 'ஓணம் பண்டிகையின் தாத்பர்யம் – மகாபலி சக்கரவர்த்தியிடம் மகாவிஷ்ணு வாமன ரூபத்தில் வந்து 3 அடி மண் கேட்டு ஆகாயத்தையே காலால் அளந்த வரலாறு.

ஆன்மீகத்தை நம்பாத முதல்வர் ஸ்டாலின், இதை மட்டும் நம்புகிறாரா? தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், தமிழ் பண்டிகைக்கு வாழ்த்த தெரிவிக்காமல் வெளிமாநில மக்கள் கொண்டாடும் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிப்பதுதான் திராவிட மாடலா?

-இவ்வாறு தெரிவித்தனர்.

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

உன்னால் முடியும் பெண்ணே! இந்த 5 அடிப்படை விஷயங்கள் இருந்தால் போதுமே!

Dear Girls… உங்கள் தொப்பையை மறைக்க இப்படி ட்ரெஸ் பண்ணுங்களேன்!

'இளமையில் கல்' என்பதன் அர்த்தமும் அதன் புரிதலும்... இது ரொம்ப தப்பாச்சே!

SCROLL FOR NEXT