செய்திகள்

தமிழக பொறியியல் படிப்புகள்; தரவரிசைப் பட்டியல் வெளியீடு! 

கல்கி

தமிழக பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப் பட்டது. 

–இதுகுறித்து தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்ததாவது: 

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 20-ம் தேதி முதல் தொடங்குகிறது. ஆகஸ்ட் 20 முதல் 23 வரை முதற்கட்டமாக, சிறப்பு பிரிவு இடஒதுக்கீடு கலந்தாய்வு (மாற்றுத் திறனாளி, முன்னாள் படைவீரர், விளையாட்டு வீரர், 7.5% அரசுப் பள்ளி ஒதுக்கீடு மாணவர்களுக்கு சிறப்பு  கலந்தாய்வு நடைபெறும் என்றும், ஆகஸ்ட் 25-ம் தேதி  அக்டோபர் 21-ம் தேதி வரை பொது கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த பொறியியல் படிப்புகளுக்கான மாணவர்கள் தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இவற்றை www.tndte.gov.in  (அல்லது)  www.tneaonline.org  என்ற இணைய தளப் பக்கத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம்‌, சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் மத்திய கல்வி நிறுவனங்கள் ஒப்படைத்த இடங்களுக்கான சேர்க்கை ஒற்றை சாளர முறைப்படி மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 

–இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. 

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

SCROLL FOR NEXT