கொரோனா தொற்று காரணமாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 14-ம் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்ததையடுத்து இன்று காலை 9.45 மணிக்கு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டலும், இன்னும் ஒரு வாரகாலம் முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டுமென்று மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து நேரடியாக தலைமைச் செயலகம் வந்த முதல்வர் ஸ்டாலின், குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்ததாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
-இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது;
முதல்வர் ஸ்டாலின் இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் நேரடியாக தலைமைச் செயலகம் வந்து, காணொலிக் காட்சி மூலம் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தார். அவரைத் தொடர்ந்து தமிழக எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.
-இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.