மாவீரன் பூலித்தேவனின் படைத் தளபதியாக விளங்கி, ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்தவர் மாவீரன் ஒண்டி வீரன். இன்று ஒண்டி வீரனின் 251வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு இன்று அவரின் நினைவு தபால்தலை வெளியிடப்படும் என மத்திய தபால் துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் சிவகிரி பச்சேரி கிராமத்தில் நாளை நடைபெறும் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழச்சி மற்றும் செப்டம்பர் 1-ம் தேதி .நெற்கட்டும் செவல் கிராமத்தில் நடைபெறும் பூலித்தேவன் பிறந்தநாள் ஆகியவை நடைபெற உள்ளது.
இந்நிலையில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தென்காசி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் அடுத்த மாதம் 2ம் தேதி மாலை 6 மணி வரை 15 நாட்கள் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது நினைவு தபால் தலையை மத்திய அரசு வெளியிட உள்ளது.
இதற்கு மத்திய மீன்வளம், கால்நடை, பால்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் நேற்று மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.