செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்த இடைக்கால தடை!

கல்கி

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினரை நியமிக்கும் வரை, தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்குத்  தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் கே.வெங்கடாச்சலம், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில்,இந்நிலையில் தமிழகத்தின் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி மின்வாரியம் சார்பில், தமிழ்நாடு மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மின்கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இதை எதிர்த்து தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் கே.வெங்கடாச்சலம் என்பவர்  உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அவர் குறிப்பிட்டதாவது;

தமிழ்நாடு மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் ஒரு தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் மட்டுமே உள்ளனர். எனவே இந்த  ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் ஒருவரை நியமிக்கும் வரை மின்  கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்கவும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும்.

-இவ்வாறு அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் உத்தரவிட்டதாவது;

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் ஒருவரை நியமிக்கும் வரை தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. ஆனால் கருத்து கேட்பு கூட்டம் நடத்த தடையில்லை.

-இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இது தெரிஞ்சா இனி நீங்க பிரட் சாப்பிடவே மாட்டீங்க! 

லடாக் பயண தொடர் 5 - ஐந்து நிமிடங்களுக்கு மேல் இங்கே நிற்க அனுமதி இல்லை... அப்படி நின்றால்...?

முகத்தில் உள்ள ப்ளாக் ஹெட்ஸ் நீங்க இயற்கை வழிமுறை!

சேதமடைந்த மரப்பொருட்கள்... குப்பைகளாக உங்கள் வீட்டில் உள்ளதா? அச்சச்சோ தவறாச்சே...!

குரு நானக் அருளிய அற்புதமான நல் உரைகள்!

SCROLL FOR NEXT