செய்திகள்

தமிழக கூட்டுறவு சங்கத் தேர்தல்: ஆணையர் நியமனம்!

கல்கி

தமிழக கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையராக தயானந்த் கட்டாரியா நியமனம் செயயப்பட்டுள்ளார்.

– இதுகுறித்து தமிழக அரசு அறிவித்ததாவது:

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையராக தயானந்த் கட்டாரியா நியமனம் செய்யப் பட்டுள்ளார். இதுவரை கூட்டுறவுச் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் என்று இருந்ததை 3 ஆண்டுகளாக குறைக்கும் வகையிலான சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த ஜனவரி 7ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்தார்.

அதன்படி, அனைத்து வகை கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதையடுத்து கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும். இத்தேர்தலுக்கான ஆணையராக தயானந்த் கட்டாரியா நியமிக்கப் பட்டுள்ளார்.

– இவ்வாறு தமிழக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

யூரிக் அமில அளவைக் குறைக்கும் ஜூஸ் வகைகள்! 

(ஒரே பெயர் கொண்ட) இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களின் இரட்டை சதங்கள்!

“இந்தியா எங்களின் பரம எதிரி” – பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் பேச்சால் சர்ச்சை!

அவமானமும் ஒரு மூலதனம்தான்!

ஆதரவற்ற சிறுவர்களை முன்னேற்றும் முயற்சி! ரோகன் போபண்ணாவின் உயரிய நோக்கம்!

SCROLL FOR NEXT