செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல்; அதிமுக-வுக்கு நோ இரட்டை இலை!

கல்கி

தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் ஜூலை 9-ம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அதிமுக வேட்பு மனுவில் ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்திடாததால், அதிமுக-வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது.

அதிமுக-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்துள்ளதால், அக்கட்சிக்குள் குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில் தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 510 பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 34 பதவிகளுக்கு மட்டும் கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறவுள்ளதால், வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் இன்று மாலை சின்னங்களை ஒதுக்க உள்ளது.

இந்நிலையில் அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனுவில், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்திடாமல் உள்ளதால் அவர்களுக்கு இரட்டைஇலை சின்னம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட்டாலும் அவர்களுக்கு சுயேட்டை சின்னங்களே ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் இத்தேர்தலில் அதிமுக நிர்வாகிகள் பலரும் பங்குபெறாமல் ஒதுங்கியுள்ளனர்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT