செய்திகள்

‘கண்ணகி கதை தெரியுமா?’ மக்களவையில் கனிமொழி எம்.பி. சரமாரி கேள்வி!

விஜி

‘பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டின் முழுமையான வரலாறு தெரியாது’ என்றும், ‘கண்ணகி கதை தெரியுமா?’ என்றும் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். ‘தென் இந்தியர்கள் மீது இந்தியைத் திணிப்பதை நிறுத்திக் கொண்டு, சிலப்பதிகாரத்தைப் படிக்க வேண்டும்’ என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக எம்.பி. கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பதிலளிக்காததால் அவரைப் பேசவைப்பதற்காக எதிர்க்கட்சிகளால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பான விவகாரத்தில் நேற்று திமுக சார்பில் மக்களவையில் கனிமொழி பேசினார். அப்போது, புதிய நாடாளுமன்றத்துக்கு சோழர் கால பாரம்பரியம் என்று கூறி செங்கோலை கொண்டுவந்திருப்பதைக் குறிப்பிட்டார்.

ஆனால், தமிழ்நாட்டின் வரலாற்றை பிரதமர் மோடி முழுமையாக தெரிந்திருக்கவில்லை என்றும், பாண்டியன் செங்கோலை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்றும் கேள்வி எழுப்பினார். சிலப்பதிகாரத்தில் உங்களுக்கு போதிப்பதற்கு ஏராளமான பாடங்கள் இருப்பதாகவும் கனிமொழி பேசினார்.

இந்த நிலையில், தீர்மானத்தின்போது பேசிய தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா, ‘பிரதமர் என்பவர் ஒரு தரப்பினரின் பிரதிநிதி மட்டும் இல்லை. ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிநிதி’ என்றும் கூறினார். கடந்த ஒன்பது ஆண்டுகளில் எத்தனை காஷ்மீரி பண்டிட்களை அழைத்து வந்தீர்கள்?’ என்றும் அவர் கேள்வி எழுப்பியதோடு, ‘தாங்களும் இந்த நாட்டின் ஒரு அங்கம்தான்’ என்று ஃபரூக் அப்துல்லா குறிப்பிட்டார்.

மணக்கோலத்தில் காட்சி தரும் சிவபெருமான் அருளும் திருத்தலம் எங்குள்ளது தெரியுமா?

கோடைக்கால அலர்ஜிகளுக்கு குட்பாய் சொல்லுங்கள்!

எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிட்டால் ஆரோக்கியம் தெரியுமா?

மாணவர்களுக்கான சிறந்த 6 AI கருவிகள்!

Beehive Ginger: இது இஞ்சி இல்ல ஷாம்பூ… என்னடா சொல்றீங்க?

SCROLL FOR NEXT