செய்திகள்

SpaceX நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்ட 14 வயது சிறுவன் புலம்பல்.

கிரி கணபதி

லகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் ஸ்பேஸ் நிறுவனத்தில் வெறும் 14 வயதுடைய கைரான் குவாசி என்ற சிறுவன் சாஃப்ட்வேர் இன்ஜினியராகப் பணியமர்த்தப்பட்ட செய்தி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது அச்சிறுவன் தனது இன்ஸ்டாகிராம் கணக்கு வழியாக  புலம்பித்தள்ளிக் கொண்டிருக்கிறான்.

படிப்பில் சிறந்து விளங்கியதால் தனது 9 வயதிலேயே முழு நேர கணித பட்டப்படிப்பில் சேர்ந்த கைரான் குவாசி, அதன் பிறகு தனது 14ஆம் வயதில் சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். பட்டம் பெற்ற கையோடு, எலான் மஸ்கின் ஸ்பேஸ் நிறுவனத்தில் அவருக்கு வேலையும் கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து தனது லிங்க்டின் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்ய தனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகப்" பதிவிட்டிருந்தார்.‌ கைரான் குவாசியின் இந்த பதிவு LinkedIn தளத்தில் மிகப்பெரிய வைரலாகி பல லட்சம் மக்களின் கவனத்தை ஈர்த்தது. 

மேலும் லிங்க்குடியில் அவர் எழுதியிருந்த போஸ்டில் "ஸ்பேஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் இன்ஜினியர் குழுவில் நான் மென்பொருள் பணியாளராக இணைய உள்ளேன். என் வயதை பொருட்படுத்தாமல் திறமையை பொருட்படுத்திய நிறுவனங்களில் இதுவும் ஒன்று" என எலான் மஸ்கியும் அவரது ஸ்பேசஸ் நிறுவனத்தையும் புகழ்ந்து தள்ளினார்.

எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருந்த வேளையில், திடீரென கைரான் குவாசியின் LinkedIn கணக்கு பிளாக் செய்யப்பட்டது. தொடக்கத்தில் கைரான் குவாசிக்கு ஒன்றுமே புரியவில்லை. அதன் பிறகு LinkedIn வழியாக கிடைத்த தகவலின்படி, அவர் கணக்கு முடக்கப் பட்டதற்கு காரணத்தை அவர் புரிந்து கொண்டார். 

என்னதான் எலான் மஸ்க் வயதுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் திறமைக்கு முக்கியத்துவம் அளித்தாலும், LinkedIn தளம் வழியாக வேலை தேடுவதற்கு என்று வயது வரம்பு இருக்கிறது. இந்த தளத்தில் வேலை தேடுவதற்கு குறைந்தது 16 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். கைரான் குவாசியின் வயது வெறும் 14 தான் என்பதால், அவருடைய கணக்கு ப்ளாக் செய்யப்பட்டதாக LinkedIn நிறுவனம் தெரிவித்தது. 

இதை பொறுத்துக் கொள்ள முடியாத கைரான் குவாசி, உடனடியாக தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் வழியாக "இந்த நடவடிக்கை நியாயமற்றது மற்றும் பழமையான முட்டாள்தனம் வாய்ந்தது" என்றெல்லாம் கூறி LinkedIn தளத்தை கடுமையாக பேசியிருந்தான். மேலும் நான் விரும்பும் பொறியியல் வேளையில் சேர எனக்கு தகுதி உள்ளது. ஆனால் LinkedIn தளத்தை அணுகுவதற்கு தகுதி இல்லையா? இது இந்த நிறுவனத்தின் கொள்கைகளில் உள்ள பின்னடைவைக் காட்டுகிறது என்றும் கூறியுள்ளான். 

இறுதியாக LinkedIn பயனர்கள் என்னுடைய இந்த ஸ்கிரீன்ஷாட்-ஐ உங்களின் LinkedIn அக்கவுண்டில் பகிருங்கள். அந்த தளத்தில் என்னைப் பின்தொடர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களை இன்ஸ்டாகிராமில் என்னுடன் இணையுமாறு கேட்க முடியுமா என்றும் கோரிக்கை வைத்துள்ளான். அதாவது LinkedIn-ல் தன்னைப் பின் தொடர்ந்தவர்களை இன்ஸ்டாகிராமில் பின்தொடருமாறு கைரான் குவாசி கேட்டுக் கொண்டுள்ளான்.

பெண்களே! உங்கள் முகத்திற்கு ஏற்ற பொட்டு எது?

5 Cool experiments for young science lovers!

உண்டியலின்றி உயர்ந்து நிற்கும் பாலாஜி!

கவிதை - மாற்றம் வேண்டும்!

60 + வயது... அழகு நிலையம் செல்வது எதற்கு?

SCROLL FOR NEXT