கே.எஸ். அழகிரி 
செய்திகள்

கை கூப்பி கையோடு கை கோர்ப்போம்!

ஜெ. ராம்கி

ராகுல் காந்தியின் யாத்திரை, இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை பிடித்தது, குஜராத்தில் இரண்டாமிடத்திற்கு வந்தது என அடுத்தடுத்து வரும் நல்ல செய்திகளால் தமிழ்நாடு காங்கிரஸ் நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிறது. சென்ற மாதம் வரை காங்கிரஸ் கட்சியின் விழாக்களில் பங்கேற்க தயங்கிக் கொண்டிருந்த தொண்டர்கள் தற்போது உற்சாகத்தோடு உலா வருகிறார்கள்.

சில வாரங்களுக்கு முன் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் தொண்டர்கள் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும். எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, மக்களுக்கு சேவை செய்ய முன்வர வேண்டும் என்று பேசியதோடு, ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் போல் கட்டுக்கோப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் உதாரணம் காட்டி பேசியிருந்தார்.

சமீபத்தில் நடைபெற்ற கோபண்ணா எழுதிய மாமனிதர் நேரு நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆனால், கட்சியின் மூத்த நிர்வாகிகளும், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் கலந்து கொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

முதல்வரும் சக கூட்டணித் தலைவர்களும் கலந்து கொண்ட விழா அது. மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன்தான் தி.மு.க கூட்டணி சேரும் என்பதை முதல்வர் உறுதிப்படுத்திய முக்கியமான கூட்டம். அதில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஏனோ கலந்து கொள்ளவில்லை. குறிப்பாக செல்வப்பெருந்தகை உள்ளிட்டவர்களும் தங்கபாலு, ஈவி.கேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் கலந்து கொள்ளாதது கோஷ்டிப் பூசல்களை வெளிச்சமிட்டு காட்டியது.

இந்நிலையில், 'நாங்கள் ஒற்றுமையோடுதான் இருக்கிறோம். முன்பை விட உற்சாகமாக செயல்படுகிறோம். கையோடு கை கோர்ப்போம் என்னும் கோஷத்தோடு தமிழகம் முழுக்க பயணம் செய்யப் போகிறோம். இந்தியாவின் இறையாண்மையை காக்க அரசியல் சாசனத்தை மதிக்க வேண்டியதன் அவசியத்தை ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வார்கள் என்று நம்பிக்கையோடு சொல்கிறார், கே.எஸ். அழகிரி.

விரல்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் கை கூப்ப முடியும். கைகளை கூப்பினால் மட்டுமே மற்றவர்களோடு கை கோர்க்க முடியும். சரிதானே?

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT