அமெரிக்காவில் தற்போதெல்லாம் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருவது அமெரிக்கர்களிடையே பெரும் கலக்கத்தையும், பயத்தையும் ஏற்படுத்திவருகிறது. சமீபகாலமாக பொது இடங்களில் துப்பாக்கி சூடு நடைபெற்றுவதும் அதிகரித்து வருவது கண்டனத்துக்குரியது. இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று இரவு தன் பாலின ஈர்ப்பாளர்கள் (LGBTQ)பயன்படுத்தும் கிளப் கியூ நைட் கிளப் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவின் கொலராடோ ஸ்பிரிங்ஸில் LGBTQ சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கான விடுதியாக அறியப்படும் கிளப் கியூ என்கிற இரவு நேர விடுதியில், நேற்றிரவு அடையாளம் தெரிய நபரால் திடீரென இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடைபெற்றது. இதனால் அமெரிக்காவின் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அறிந்த போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, துப்பாக்கிச்சூட்டை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இதில் படுகாயமடைந்த 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கொலராடோ ஸ்பிரிங்ஸ் லெப்டினன்ட் பமீலா காஸ்ட்ரோ, கிளப்பில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு சந்தேக நபர் ஒருவரைக் காவலில் வைத்து, விசாரித்து வருவதாகத் தெரிவித்தார்.