செய்திகள்

‘விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்:'பழ.நெடுமாறன் பரபரப்பு!

கல்கி டெஸ்க்

ஞ்சை மாவட்டம், விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், இலங்கை ராணுவத்தால் 2009ம் ஆண்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தற்போது உயிருடன் இருப்பதாகவும் அவர் விரைவில் வரப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றிய ஒரு உண்மையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச சூழலும் ராஜபட்ச ஆட்சிக்கு எதிராக வெடித்துக் கிளம்பிய இலங்கை மக்களின் போராட்டமான இந்த சூழலில் பிரபாகரன் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. இந்த சூழலில் பிரபாகரன் மிக்க நலமுடன் இருகிறார் என்ற செய்தியை உலகம் முழுக்க உள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டு பரப்பிய யூகங்களுக்கும் ஐயங்களுக்கும் இந்த செய்தி முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறேன். அதோடு, தமிழீழ மக்களின் விடுதலைக்கான திட்டத்தினை அவர் விரைவில அறிவிக்க இருப்பதையும் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். தமிழீழ மக்களும் உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டிக் கொள்கிறேன்.

ஈழத்தில் விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அவர்கள் அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதுவாக இருந்தாலும் எந்தக் காலகட்டத்திலும் அவர்களிடமிருந்து எந்த உதவியும் பெறுவதில்லை என்பதில் பிரபாகரன் உறுதியாக இருந்தார். தற்போது இலங்கையில் சீனா ஆழமாகக் காலூன்றி இந்தியாவுக்கு எதிராக செயல்படும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மிக முக்கியமான இந்த காலகட்டத்தில் தமிழக அரசும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தமிழ் மக்களும் ஒன்றுபட்டு பிரபாகரனுக்கு துணை நிற்குமாறு வேண்டிக் கேட்கிறோம்.

பிரபாரகன் குடும்பத்தாருடன் எனக்கு இப்போதும் தொடர்பு இருக்கிறது. அந்தத் தொடர்பின் மூலம் அறிந்த செய்தியை அவருடைய அனுமதியின் பேரில் இப்போது இங்கே வெளியிடுகிறேன். எங்கே இருக்கிறார்? எப்போது அவர் வருவார் என்பதை அறிய உங்களோடு சேர்த்து எனக்கும் மற்றும் உலகம் முழுக்க உள்ள தமிழர்களுக்கும் அறிய ஆவலாக உள்ளது. அந்தச் செய்தியை அவர் விரைவில் வெளியிடுவார்” என்று பேசினார். இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கவிஞர் காசி ஆனந்தன், அய்யனாபுரம் சி.முருகேசன், வழக்குரைஞர் அ.நல்லதுரை ஆகியோர் உடனிருந்தனர்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT