5000 கோடி செலவில் தனது மகனின் திருமனத்தை முடித்த முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் நிறுவனத்திலிருந்து சுமார் 42 ஆயிரம் பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது, இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் திருமணம் கடந்த ஜூலை 12 முதல் 14 வரை கோலாகலமாக மும்பையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் ஹாலிவுட் பிரபலம் முதல் இந்தியாவின் முக்கிய பிரபலங்கள் வரை கலந்துக்கொண்டு அசத்தினர். மூன்று நாட்கள் நடந்த இந்த திருமண கொண்டாட்டத்திற்கு அம்பானி குடும்பத்தினர் சுமார் 5 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளார்கள். சராசரியாக ஒரு நாளைக்கு மட்டும் 9000 விருந்தினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்கள்.
இந்தநிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 42,000 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இஷா அம்பானி கவனித்து வரும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் தான் அதிக அளவு வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட 60% ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் புதிதாக வேலைக்கு ஆள் எடுப்பதும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் 42000 பேர் வேலை இழந்தது மட்டுமின்றி புதிய வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். அதாவது, திருமணத்தில் பங்காற்றிய வெளிநாட்டு பிரபலங்களுக்கு காசு கொடுக்க முடியவில்லையா? போன்ற கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றன.
பெட்ரோலியம், தொலைத்தொடர்பு உட்பட பல்வேறு துறைகளில் ரிலையன்ஸ் குழுமம் செயல்பட்டு வருகிறது. 1977ம் ஆண்டு முதல் இந்த ரிலையன்ஸ் குழுமம் செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் 2002ம் ஆண்டு திருபாய் அம்பானி இறந்த பின்னர், நிறுவனத்தின் முழு பொறுப்பையும் முகேஷ் அம்பானி ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.