செய்திகள்

பேருந்தின் டீசல் டேங்க் வெடித்ததில் 25 பேர் பலி... மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

விஜி

மகாராஷ்டிராவின் புல்தானா பகுதியில் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தின் டீசல் டேங்க் வெடித்ததில் 3 குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர்.


சமீபத்தில் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து ஏராளமானோர் செத்து மடிந்தனர். இந்த ரணமே ஆராத நிலையில், தற்போது மகாராஷ்டிராவில் ஒரு கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், எவத்மால் பகுதியில் இருந்து புனே நோக்கி 33 பேருடன் தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது, புல்தானா பகுதியில் உள்ள சம்ருதி மகாமார்க் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 2 மணிக்கு சென்றுகொண்டிருந்தபோது, லேசான மழை பெய்ததால், டயர் வெடித்துள்ளது.

இதனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தள்ளாடி கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக டீசல் டேங்கும் வெடித்து சிதறியது. இதில், 3 குழந்தைகள் உட்பட 25 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 8 பேர் புல்தானா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பாக பேசியுள்ள புல்தானா எஸ்பி பாபுராவ் மகாமுனி, "பேருந்தில் இருந்து இதுவரை 25 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பேருந்தில் மொத்தம் 32 பேர் பயணம் செய்தனர். 6-8 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் புல்தானா சிவில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பயணிகளில் பலர் நாக்பூர், வார்தா மற்றும் யவத்மால் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

SCROLL FOR NEXT