சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி மாலத்தீவுக்கு சென்று வந்தது முதல், அந்நாட்டு குறித்த ஏராளமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக மாலத்தீவ் அமைச்சர்கள் சிலர் பிரதமர்மோடி குறித்த அவதூறான கருத்துக்கு பிறகு இந்தியாவில் மாலத்தீவு பேசுப்பொருளாக மாறியுள்ளது. இதனிடைய மாலத்தீவு பிரதமர் முகமது மூய்ஸ் (Maldives president Mohamed muizzu) குறித்த தேடுதல் இணையத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
முகமது மூய்ஸ் லண்டன் பலகலைக்கழகத்தில் கட்டமைப்பு பொறியியலில் இளங்களை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர். பின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் PHD முடித்தார். முதன்முறை மாலத்தீவு அரசாங்கத்திற்காக 1998ம் ஆண்டு கட்டுமானம் மற்றும் பொதுப்பணி துறையில் தொழில்நுட்பத்தில் பயிற்சிபெற்றார்.
அரசாங்கப் பயிற்சியிலிருந்து அரசியல் வாழ்க்கைக்கு 2012ம் ஆண்டு மாறினார். ஆம்! மூய்ஸ் ‘அதாலத் கட்சி’யின் ஒரு உறுப்பினராக மாறி அப்போதய ஜனாதிபதி வஹீத்தின் ஹசனுக்கு சுற்றுசூழல் அமைச்சராகப் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து 2013ம் ஆண்டு ஜனாதிபதி அப்துல்லா யாமீனின் நிர்வாகத்தின் கீழ் அதே பதவியில் தொடர்ந்தார்.
இவர் மாலத்தீவின் ஹுல்ஹுலே மற்றும் ஹுல்ஹுமாலே தீவுகளை இணைக்கும் 1.39 கிலோ மீட்டர் பாலத்தை மேற்பார்வையிடும் பணியில் இருந்து வந்தார். இதுதான் மாலத்தீவில் இரண்டு தீவுகளுக்கு இடையே கட்டப்பட்ட முதல் பாலமாகும். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் அரசியலில் இறங்கிவிட்டோம் என்பதற்காக அவர் படித்த பொறியியல் படிப்பை மறக்கவேயில்லை. இதுவே அவர் கட்டடக்கலைகளில் மேற்பார்வையிட காரணமானது.
ஆம்! இவர் அமைச்சராக இருந்த காலத்தில் பல பூங்காக்கள், துறைமுகங்கள், மசூதிகள், பொது கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள், சாலைகள் என அனைத்து உள்கட்டமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து மூய்ஸ் 2018ம் ஆண்டு மாலத்தீவின் முன்னேற்றக் கட்சியில் இணைந்தார். அடுத்த ஆண்டே அவர் அக்கட்சியின் துணை தலைவராகவும், எதிர்க்கட்சியின் தேர்தல் துறையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் 2021ம் ஆண்டு மாலத்தீவு ஜனநாயக கட்சியின் வேட்பாளரைத் தோற்கடித்து மாலத்தீவின் தலைநகரமான மாலேவின் முதல் மேயராக ஆனார்.
மூய்ஸ் மேயரான பிறகு சில வருடங்களில் அரசியலின் அடுத்தக்கட்டத்திற்கு சென்றார். மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவருமான அப்துல்லா யாமீன் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்றார். எதிர்க்கட்சி கூட்டனியின் ஒரு கட்சியான மக்கள் தேசிய காங்கிரஸின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார் மூய்ஸ்.
2021ம் ஆண்டின் கணக்குப்படி இந்தியா மாலத்தீவுக்கு கொடுத்த விமானங்களை இயக்க 70 இந்தியர்கள் அங்கு சென்றனர். மூய்ஸ் பதவியேற்பதற்கு முன் முதல் கூறியது, அனைத்து இந்திய படைகளும் வெளியேற வேண்டுமென்றுத்தான். மூய்ஸின் தேர்தல் பிரச்சாரம் கூட மாலத்தீவில் இந்திய செல்வாக்கை குறைப்பது பற்றித்தான் அதிகம் இருந்தது. இதனால் சிலர் இவர் சீனாவின் ஆதரவாளர் என்று கூறிவருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து 2023ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில் 46.06 சதவீத மக்கள் வாக்குகளைப் பெற்றார். இரண்டாவது சுற்றில் 54.04 சதவீத மக்கள் ஆதரவைப் பெற்று வெற்றிபெற்றார். அந்தவகையில் நவம்பர் 17ம் தேதி 2023ம் ஆண்டு மூய்ஸ் மாலத்தீவின் ஒன்பதாவது அதிபராக பதவியேற்றார்.