மல்லிகார்ஜூன கார்கே - சோனியா காந்தி 
செய்திகள்

காங்கிரஸ் கட்சித் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே இன்று பொறுப்பேற்பு!

கல்கி டெஸ்க்

 அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே இன்று பதவியேற்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததை அடுத்து, அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து அக்கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி பதவி வகித்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 17-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, அதில் அக்கட்சியின் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 இந்த தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே 7,897 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். சுமார் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் தலைவராக தேர்வு பெற்றது குறிப்பிடத் தக்கது.

 இந்நிலையில் மல்லிகார்ஜூன கார்கே டெல்லியில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இதற்காக காங்கிரஸ் தலைமையகம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்த விழாவில், காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி, தேர்தல் சான்றிதழை கார்கேவிடம் முறைப்படி ஒப்படைக்கிறார். பின்னர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கட்சியில் தங்கள் பொறுப்புகளை கார்கேவிடம் ஒப்படைப்பார்கள் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT