செய்திகள்

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் மம்தா பானர்ஜி!

கார்த்திகா வாசுதேவன்

2024 பொதுத் தேர்தலுக்கு முன் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் கட்சிகளில் முக்கியக் கட்சியாக தனது கட்சியை முன்னிறுத்தி வருகிறார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. தமது எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதத்தில் மே 27ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை மம்தா தவிர்க்க வாய்ப்புள்ளதாக மேற்வங்க மாநிலம், நபன்னாவில் உள்ள மாநிலச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை அவரது கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணிக்க முடிவு செய்த ஒரு நாள் கழித்து மம்தாவின் இந்த முடிவு வெளி வந்துள்ளது. நிதி ஆயோக்கை மம்தா புறக்கணிப்பது இது முதல் முறையல்ல

2018, 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், சிந்தனைக் குழுவிற்கு எந்த சக்தியும் இல்லை என்றும் இந்த நிதி ஆயோக் கூட்டங்கள் "பயனற்றவை" என்றும் கூறி அவர் கூட்டங்களைத் தவிர்த்திருக்கிறார்.

இந்த முறை நிதி ஆயோக் கூட்டத்தை மம்தா பானர்ஜி புறக்கணித்ததற்கான காரணம் தெரியவில்லை. நேற்று (புதன்கிழமை)

பிற்பகலில், நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்றும், மே 27 ஆம் தேதி தனது டெல்லி பயணத்தை ரத்து செய்யுமாறும் மேற்கு வங்க முதல்வர் கூறினார்” என்று மாநில அரசின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆனால், முன்னதாக இம்மாத தொடக்கத்தில் இதே நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க மம்தா விருப்பம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனெனில், இது, ஒரு மாநிலத்தின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துவதற்கான ஒரே மேடை. எனவே, மத்திய அரசால் பறிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாநிலத்தின் பிரச்சினையை முன்னிலைப்படுத்த மே 27ஆம் தேதி புது தில்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் நான் பங்கேற்கிறேன். என அவர் தெரிவித்திருந்தார்.

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் மம்தாவின் முடிவு அரசியல் ரீதியாக நன்கு கணக்கிடப்பட்டதாக மூத்த திரிணாமூல் காங்கிரஸ் தலைமை கருதுகிறது. அவரது முந்தைய நிதி ஆயோக் கூட்ட புறக்கணிப்புகள் மாநில அளவிலும், தேசிய அளவிலும் சிறிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தின, ஆனால் இந்த ஆண்டு நிகழ்வைத் தவிர்ப்பதற்கான அவரது முடிவு அதைக் காட்டிலும் மேலும் முக்கியத்துவம் பெறும் என அவர்கள் கருதுகின்றனர், குறிப்பாக மே 28 அன்று பாஜக விற்கு எதிராக அணிசேரும் 19 எதிர்க்கட்சிகளும் தொடக்க நிகழ்வைப் புறக்கணிக்க இணையும் நாளில் பிரதான அரசியல் சக்தியாக திரிணாமூல் காங்கிரஸ் சித்தரிக்கப்படும்.

- என டிஎம்சி மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக தேர்தல் முடிவுகள் திரிணாமூல் கங்கிரஸின் நம்பிக்கையை ஆட்டம் காண வைத்திருக்கிறது. ஆளும் பாஜக வை காங்கிரஸால் வெற்றிகொள்ள முடிந்ததை தீதி குறிப்பிட விரும்பவில்லை போன்ற தோற்றம் அங்கு நிலவியது.

அதனால் தான், கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, காங்கிரஸின் பெயரைக் குறிப்பிடாமல், பாஜகவுக்கு எதிராகவும், வேற்றுமையில் ஒற்றுமைக்கு ஆதரவாகவும் மக்கள் அளித்த தீர்ப்பு என்று மம்தா விவரித்தார். கர்நாடக தேர்தலில் ஜனதா தளம் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (ஜேடிஎஸ்) செயல்பாட்டிற்காக எச்டி குமாரசாமியைப் பாராட்டினாலும், மேற்கு வங்க முதல்வர், பாஜகவுக்கு எதிராக வெற்றி பெற்ற வேட்பாளர்களை வாழ்த்தும் போது காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிடவில்லை.

பாஜகவை தோற்கடிக்கக்கூடிய ஒரே அரசியல் சக்தி திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே என்று அவர் கருதினார். “ஆனால் கர்நாடகாவில் காங்கிரஸின் அற்புதமான வெற்றி அவரது கூற்றுக்கு ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மத்திய பிரதேசத்தில் தேர்தல் நெருங்கி வருகிறது

சத்தீஸ்கர் மற்றும் மேலும் இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றிபெற முடிந்தால், மம்தாவின் முக்கிய பாஜக எதிர்ப்புக் கட்சி என்ற கூற்றுக்கு சவால் விடுக்கப்படும். என அவரது சொந்தக் கட்சியின் மூத்த தலைவர்களே தற்போது கருதுகின்றனர்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT