இந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக சேவையாற்றி வரும் அமிதாப் பச்சனுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெறும் 28-வது சர்வதேச திரைப்பட விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி, இதுகுறித்துப் பேசியதாவது:
இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அமிதாப்பச்சனுக்கு வழங்க வேண்டும். இதை அரசு சார்பாக அல்லாமல், மேற்கு வங்க மக்கள் சார்பாக இந்த கோரிக்கையை மத்திய அரசுக்கு வைக்கிறேன் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன், சத்ருகன் சின்ஹா, ஷாருக்கான், ராணி முகர்ஜி தவிர கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அமிதாப் பச்சன் பேசும்போது, திரைப்பட சான்றிதழ் வாரியம் இன்றளவும் கடைப்பிடித்து வரும் தணிக்கை விதிகள், சினிமாட்டோகிராஃப் சட்டம் 1952-ல் உருவாக்கப்பட்டது. அதை நவீனப்படுத்த வேண்டியது அவசியம் என்று கருத்து தெரிவித்தார்.