உயிரிழந்த நபர்
உயிரிழந்த நபர் 
செய்திகள்

விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்.. அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு!

விஜி

தேனி மாவட்டத்தில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பை அடுத்து முதல் முறையாக அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது.

தேனி மாவட்டம், சின்னமனூர் காந்தி நகர் காலனியைச் சேர்ந்த தனசேகர பாண்டியன் - அன்ன பாக்கியம் தம்பதியரின் மகன் வடிவேல், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 23ஆம் தேதியன்று சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதில், மூளைச்சாவு ஏற்பட்ட வடிவேலு நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டிருப்பதால், முதலமைச்சர் அறிவித்தபடி அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் இன்று நடைபெற உள்ளது. சின்னமனூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் இறுதிச்சடங்கு நிகழ்வில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பங்கேற்றார்.

அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.‌ குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரின் இறுதி அஞ்சலிக்குப் பின்னர் சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட எரிவாயு தகன மேடையில் வடிவேலுவின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. உயிரிழந்த வடிவேலுவுக்கு பட்டுலட்சுமி என்ற மனைவியும் தனுஷ் குமார் என்ற மகனும், அக்சயா கௌரி என்ற மகளும் உள்ளனர். வடிவேலுவின் குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இறுதி சடங்கில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயிரிழந்த வடிவேலின் தந்தையும் கண் பார்வையில்லாமல் தவித்துவருவதை அறிந்தோம். அவரை சென்னைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்து கண் தானம் மூலம் பார்வையைத் திரும்பப் பெற இயலுமென்றால் அவரது பெயரையும் ட்ரான்ஸ்ப்ளான்ட் கமிட்டியில் இணைத்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

கொளுத்தும் வெயிலிலும் ஒரு நன்மை இருக்கிறது; எப்படி தெரியுமா?

அரிசோனா பாலைவனத்தில் பயிற்சி செய்யும் நாசா...  காரணம் தெரிஞ்சா ஆடிப் போயிடுவீங்க! 

IPL 2024: ருதுராஜிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்படலாம் – இர்பான் பதான் எச்சரிக்கை!

இதய மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு புதிய மைல்கல்!

பெண்களுக்கு கைமேல் பலன் தரும் கன்னிகா பரமேஸ்வரி வழிபாடு!

SCROLL FOR NEXT