செய்திகள்

மணிப்பூர்: நிவாரண முகாம்களை பார்வையிடச் சென்ற ராகுல்காந்தியின் வாகனம் தடுத்து நிறுத்தம்.

ஜெ.ராகவன்

ணிப்பூர் மாநிலத்தில் சூரசந்திரபூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்ற வாகனம் விஷ்ணுபூரில்  தடுத்து நிறுத்தப்பட்டது.

வன்முறை ஏற்படலாம் என்ற காரணத்தை ராகுல் மற்றும் அவருடன் சென்ற வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக போலீஸார் கூறினர்.

கடந்த மே மாதம் 3 ஆம் தேதியிலிருந்து மணிப்பூர் இனமோதல்களை சந்தித்து வருகிறது. மாநிலத்தில் 53 சதவீதம் மக்கள்தொகை கொண்ட மெய்டிஸ் சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து அளிப்பதற்கு பழங்குடியினத்தைச் சேர்ந்த குக்கி வகுப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வன்முறை, கலவரத்துக்கு இதுவரை 120 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 300-க்கும் மேலானவர்கள் காயமடைந்துள்ளனர். வன்முறை தாக்குதல் மற்றும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 40,000-த்துக்கும் மேலானவர்கள் வேறு இடங்களில் பாதுகாப்புதேடி தஞ்சமடைந்துள்ளனர். சுமார் 2,000 வீடுகள் சேதமடைந்தன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த மாதம் 29 மற்றும் 30 ஆம் தேதி மணிப்பூர் சென்று இம்பால் மற்று சூரசந்திரபூர் சென்று நிவாரண முகாம்களை பார்வையிட்டு.  மக்கள் சமூகத்தினரை சந்தித்து ஆறுதல் கூற இருப்பதாக தகவல்கள் வெளி வந்தன. மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வன்முறையில் நீடித்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி அங்கு அமைதி ஏற்பட வழிவகுப்பதே அவரின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே வியாழக்கிழமை காலை இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் தலைநகர் இம்பால் வந்த ராகுல் காந்தி, பின்னர் தமது ஆதரவாளர்களுடன் காரில் சூர சந்திரபூர் மாவட்டத்துக்கு புறப்பட்டுச் சென்றார். இந்த நிலையில் விஷ்ணுபூரில் போலீஸார் ராகுல் மற்றும அவரது ஆதரவாளர்கள் வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தினர். ராகுல் மற்றும் அவருக்கு பாதுகாப்பாக செல்லும் வாகனத்தை கலவரக்காரர்கள் வாகனம் என்று பாதுகாப்பு படையினர் தவறாக நினைத்துவிடக்கூடும். இதனால் பிரச்னை ஏற்படும். ராகுல் காந்தியின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். எனவே அவர் மேலும் முன்னேறிச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று போலீஸார் கூறியதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் ராகுல் காந்தியின் வாகனத்தை விஷ்ணுபூர் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தியது ஏன் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான கே.சி.வேணுகோபால் குறிப்பிட்டுள்ளார். சாலையின் இருபக்கங்களிலும் மக்கள் நின்று கொண்டு ராகுல் காந்திக்கு வரவேற்பு அளிக்க தயாராக இருந்தனர். ஆனாலும், ராகுல் காந்தியை தொடர்ந்து செல்ல போலீஸார் அனுமதிக்க வில்லை என்று அவர் கூறினார்.

இதனிடையே ராகுல்காந்தி வெள்ளிக்கிழமை ஹெலிகாப்டர் மூலம் நிவாரண முகாம்களுக்கு செல்லக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் மாநிலம் இம்பாலில் முதல்வர், அமைச்சர்கள், அரசியல் தலைவர், மெய்டீஸ் மற்றும் குக்கி சமூக பிரதிநிதிகளிடம் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT