செய்திகள்

உலகின் மிகப் பெரிய மவுனா லோவா எரிமலை வெடித்துச் சீற்றம்!

கல்கி டெஸ்க்

அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலையான மவுனா லோவா 38 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்து சீற்றமடைந்துள்ளதால், ஹவாய் தீவிலுள்ள 2 லட்சம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மேற்கே பசிபிக் பெருங்கடலையொட்டி இருக்கும் ஹவாய் தீவில் உலகின் மிகப்பெரிய எரிமலையான மவுனா லோவா உள்ளது. இங்கு 38 வருடங்களுக்கு பிறகு இந்த எரிமலை வெடித்துள்ளது. ஹவாய் தீவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஏற்பட்ட கடுமையான நலநடுக்கங்களை தொடர்ந்து, நேற்றுமுதல் எரிமலை வெடித்து சிதறியது.   

இதையடுத்து மவுனா லோவா எரிமலையில் நெருப்பு குழம்பு பீரிட்டு கிளம்பி வெளியேறி வருவதாகவும், ஆனால், எரிமலை விளிம்புகளுக்கு உள்ளாக இருப்பதால், தற்போது அச்சுறுத்தல் இல்லை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆனால், இதேநிலை தொடர்ந்தால், விரைவில் மவுனா லோவா எரிமலை வெடிப்பு மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும் என்றும் நெருப்பு குழம்பின் ஓட்டம் விரைவாக மாறக்கூடும் எனவும் புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

எனவே, எரிமலைக் குழம்பு குடியிருப்பு பகுதிகளை நோக்கி வர தொடங்கினால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் வெளியேற தயாராக இருக்குமாறு ஹவாய் தீவில் வசிக்கும் சுமார் 2 லட்சம் மக்களை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 1843-ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை 33 முறை சீற்றம் கண்ட மவுனா லோவா எரிமலை, கடைசியாக 1984-ம் ஆண்டு வெடித்தது குறிப்பிடத் தக்கது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT