துணைநிலை ஆளுநர் தமிழிசை 
செய்திகள்

புதுவையில் விரைவில் தமிழில் மருத்துவப் படிப்பு; துணைநிலை ஆளுநர் தமிழிசை!

கல்கி டெஸ்க்

புதுச்சேரியில் மருத்துவப் படிப்பை தமிழில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.

இதுபற்றி மேற்கொண்டு அவர் தெரிவித்ததாவது:

புதுச்சேரியில் தமிழ் வழியில் மருத்துவ படிப்பு கொண்டு வருவதற்கான முயற்சிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக புதுவை
 முதல்வரோடு ஆலோசனை செய்து குழு அமைக்கப்படும். இவ்வாறு அமைக்கப்பட்ட அந்த குழு, 6 மாதத்துக்குள் மருத்துவக் கல்விக்கான  புத்தகங்களை தமிழில் உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் எந்த மொழியையும் திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக, தொழிற் கல்வியைக்கூட தாய்மொழியில் படிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னார்கள். எந்த படிப்பாக இருந்தாலும் தாய் மொழியில் படிக்கும்போது சுலபமாக புரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் புதுவையில் விரைவில் தமிழ்வழிக் கல்வியில் மருத்துவப் படிப்பு கொண்டு வரப்படும்.

-இவ்வாறு தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT