டிரோன்
டிரோன்  
செய்திகள்

மேகாலயாவில் டிரோன் மூலம் மருந்து விநியோகம்!

கல்கி டெஸ்க்

நாட்டிலேயே முதன்முறையாக, மேகாலயாவில் டிரோன் மூலமாக 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருந்துகள் அனுப்பட்டதாக அம்மாநில முதல்வர் கான்ராட் கே சங்மா தெரிவித்துள்ளார்.

மேகாலயாவில் மேற்கு காசி மலை மாவட்டத்தில், தலைமையகத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தொலைதூர ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டிரோன் மூலம் மருந்துகள் வெற்றிகரமாக அனுப்பப் பட்டுள்ளது.

டிரோன்கள் மூலம் அதிக தொலைவுக்கு பொருட்களை அனுப்புவது கடினம் என்ற சூழ்நிலையில், இங்கு 25 கிலோமீட்டர் மலைகளின் ஊடே செல்லக்கூடிய டிரோன் மூலம் மருந்து டெலிவரி சோதனை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.

மேகாலயா மாநிலமானது மலைகளால் சூழப்பட்டுள்ளதால், சாலை மார்க்கமாக மருந்துகளை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல கால தாமதம் ஆகிறது. இதைத் தவிர்க்க சோதனை முயற்சியாக டிரோன்களை பயன்படுத்த மேகாலயா முடிவு செய்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளது.

மேகாலயாவில் நாங்ஸ்டோயினில் இருந்து மாவெயிட் ஆரம்ப சுகாதார நிலையம் வரை 25 நிமிடங்களுக்குள் 25 கிமீ தூரத்தை இந்த டிரோன் கடந்து விட்டது. அந்த வகையில் 3 மணி நேரப் பயணத்தை அரை மணிக்கும் குறைவாக முடித்து விட்டது.  டிரோன் தொழில்நுட்பம்  எதிர்காலத்தில் இன்னும் பல வியக்கதகு சாதனைகள் புரியும் என்று மேகாலயா முதல்வர் கான்ராட் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

75 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த நியண்டர்தல் பெண்ணைப் பார்க்க வேண்டுமா? வாருங்கள்!

நீங்கள் வாழ்க்கையில் சரியான பாதையில் தான் செல்கிறீர்கள் என்பதற்கான 3 அறிகுறிகள்! 

சிறுகதை – தத்து!

உங்களுக்கு ஐஸ் போட்ட ஜூஸ் மட்டுமே குடிக்க பிடிக்குமா?

பண்டைய ரோமானியர்கள் சிறுநீரை இதற்கெல்லாமா பயன்படுத்தினார்கள்?

SCROLL FOR NEXT