அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன் 
செய்திகள்

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு; அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆலோசனை!

கல்கி டெஸ்க்

மிழக அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளதா என்பது குறித்து, இன்று அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் தமிழக சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அம்மாநில துணைநிலை ஆளுநரான தமிழிசை சவுந்தர்ராஜன் இப்பிரச்சினை குறித்து விவாதித்து நிலைமையை சீர்படுத்தியதாகத் தெரிவித்தார்.

இப்போது தமிழகத்தில் பல அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதை மறுத்துள்ளார். தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை என தெரிவித்திருந்தார்.

 இந்த சூழ்நிலையில் தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளதா என்பது குறித்து, இன்று அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் அரசு மருத்துவமனைகளில் எங்கு மருந்து தட்டுப்பாடு இருந்தாலும் 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!

World Family Doctor Day: கொண்டாடப்பட வேண்டிய ஹீரோக்கள்! 

பெண்களே! உங்கள் முகத்திற்கு ஏற்ற பொட்டு எது?

5 Cool experiments for young science lovers!

உண்டியலின்றி உயர்ந்து நிற்கும் பாலாஜி!

SCROLL FOR NEXT