செய்திகள்

அம்பத்தூரில் ஆவின் பால் தாமதம் ! பணியாளர்கள் சஸ்பென்ட்!

கல்கி டெஸ்க்

சென்னையில் அம்பத்தூர் ஆவின் பண்ணையில் இருந்து நேற்று காலையில் தாமதமான வினியோகம் ன்மற்றும் பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போனதாக புகார் எழுந்த நிலையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் அம்பத்தூர் ஆவின் பண்ணையில் இருந்து நேற்று காலையில் வினியோகம் செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போனதாக புகார் எழுந்தது. பால் பவுடர் மற்றும் வெண்ணை சரியாக சமன் படுத்தப்படாததால் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்ட 60 ஆயிரம் பாக்கெட்டுகள் கெட்டுப்போனதாக முகவர்கள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு பிரிவினர் போராட்டம் நடத்துவதால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று ஆவின் நிர்வாகம் தரப்பில் சொன்னாலும் சென்னை உள்பட பல இடங்களில் ஆவின் பால் கொள்முதல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தொழிலாளர்கள் பற்றாக் குறை, பால் கொள்முதல் குறைவு காரணமாக பால் வினியோகம் சென்னையில் தாமதமாகி வருகிறது. மாதவரம், அம்பத்தூர் பால் பண்ணையில் நீடித்து வரும் பிரச்சினையை சமாளிக்க அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

ஆவின்

பால் தட்டுப்பாட்டை சமாளிக்க மகாராஷ்டிராவில் இருந்து பால் பவுடர், வெண்ணை கொள்முதல் செய்யப்பட்டு அதனை சமன்படுத்திய பால் தரத்திற்கு மாற்றி வினியோகம் செய்வதாக கூறப்படுகிறது.

எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பால் பவுடர் சரியாக கலக்கப்படவில்லை. இதனால் பாக்கெட்டில் பவுடராக காணப்பட்டது. இதை வாங்கி சென்ற பொது மக்கள் வீட்டிற்கு சென்று பார்த்து விட்டு கடைகளில் திருப்பி கொடுத்தனர். அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், முகப்பேர், அண்ணாநகர், போரூர், பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வினியோகிக்கப் பட்ட ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போனதாக பொது மக்கள் கடைகளில் திருப்பி கேட்டு தகராறு செய்தனர்.

சென்னையில் ஒரு சில பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் பால் வினியோகம் இன்று பாதிக்கப்பட்டது. அதி காலை 5 மணி வரை அம்பத்தூர் பண்ணையில் இருந்து பால் வினியோக வாகனங்கள் வெளியே செல்ல வில்லை. பால் அட்டைதாரர் களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் சப்ளை செய்யப் பட்டது. ஆனால் கடை களுக்கு வழங்கப்படும் பால் பாக்கெட்டுகள் காலை 6 மணி வரை வெளியே செல்லவில்லை. இதனால் பொது மக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள். கடைகளுக்கு 7, 8 மணிக்கு மேல் தான் பால் சப்ளை செய்யப்பட்டது. ஆவின் பால் கிடைக்காததால் தனியார் பாலை வாங்கி சென்றனர்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT