மிஜோரம் மாநிலத்தில், ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைப் பிடிக்கிறது. கடந்த நவம்பர் 7 ஆம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 6 கட்சிகள் அடங்கிய ஜோரம் மக்கள் இயக்கம் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 21 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. மேலும் 6 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 21 இடங்களை பெற்றுள்ளதால் ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது.
ஆளுங்கட்சியான மிஜோ தேசிய முன்னணி 7 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. மேலும் 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பா.ஜ.க. 2 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது
இதில் அதிர்ச்சி தரும் செய்தி என்ன வென்றால் முதல்வர் ஜோரம் தங்காஅய்வால் தொகுதி- 1 இல் போட்டியிட்டு தோல்வி அடைந்ததுதான். துணை முதல்வர் தவான்லியாவும் டுசாங் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
மிஜோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம் மற்று காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் 40 தொகுதிகளிலும் போட்டியிட்டன. பா.ஜ.க. 13 இடங்களில் போட்டியிட்டது. முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் இறங்கியது. இவை தவிர 17 சுயேச்சைகளும் தேர்தலில் போட்டியிட்டனர்.
தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளியான போது ஜோரம் மக்கள் இயக்கும் அதிக இடங்களில் வெற்றிபெறும், எனினும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டப்பேரவை நிலையே ஏற்படும் என்று தெரிவித்திருந்தன.
கடந்த 2018 சட்டப்பேரவைத் தேர்தலில் மிஜோ தேசிய முன்னணி 26 இடங்களை கைப்பற்றி இருந்தன். ஜோரம் மக்கள் இயக்கம் 8 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் 5 இடங்களையும், பா.ஜ.க. ஒரு இடத்திலும் வென்றது.
ஜோரம் மக்கள் இயக்கும் பழங்குடியினர் காவலன் என்று கூறி பிரசாரம் செய்தது. மற்ற கட்சிகள் ஊழல், வேலையின்மை, போதைப் பொருள் கடத்தல் இவற்றை முன்னிருத்தி பிரசாரம் செய்ததன.
ஜோரம் மக்கள் இயக்கத் தலைவர் லால்டுஹோமாஸ மிஜோ தேசிய முன்னணி ஆட்சியில் நீடிப்பதை மக்கள் விரும்பவில்லை. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பினார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஊழல் அரசுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று மக்கள் நினைத்தனர். அதன் விளைவுதான் எங்களுக்கு கிடைத்த வெற்றியாகும் என்றார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கான மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மிஜோரத்தில் மக்கள் ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களுச் செல்ல விருப்பதால் வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என கோரியிருந்தனர். அதன்படி திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன.