ஜப்பான் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கியோகுடோ மற்றும் ஓம்ரான் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள பட உள்ளார். ஒசாகா வாழ் இந்திய சமூகத்தினர் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்
மேலும் ஜப்பானில் முன்னணி தொழில்துறைத் தலைவர்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து, 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தமிழ் நாட்டில் முதலீடு மேற்கொள்ள வருமாறு அழைப்பு விடுக்க இருக்கிறார்.
ஜப்பான் நாட்டில், முதலீட்டு ஊக்குவிப்பு மாநாடும் நடைபெற உள்ளது. மேலும் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட உள்ளன. இதுவரை ஜப்பான் சென்றுள்ள அரசு குழுக்கள் டோக்கியோ மட்டுமே சென்று வந்துள்ள நிலையில், இந்திய வம்சாவளியினர் அதிக அளவில் வசித்து வரும் ஒசாகாவிற்கும் முதலமைச்சர் தலைமையிலான குழு சென்றுள்ளது.
ஒசாகாவில், ஜப்பான் வெளியுறவு வர்த்தக நிறுவனமான, ஜெட்ரோ (JETRO) நிறுவனத்துடன் இணைந்து அங்கு நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் கலந்துகொள்ள உள்ளார். முக்கிய நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளைச் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு மேற்கொள்ள அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
.டோக்கியோ நகரில் அந்நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிஷி முராயசு தோஷி மற்றும் ஜப்பான் தொழில் நிறுவனமான ஜெட்ரோ தலைவர் இஷிகுரோ நொரிஹிகோவை முதலமைச்சர் இன்று சந்திக்க உள்ளார்.
200க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் ஜப்பானில் அமைந்துள்ள மேம்பட்ட தொழில் மையத்தைப் பார்வையிட உள்ளார். அதனைத் தொடர்ந்து கியோகுடோ மற்றும் ஓம்ரான் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளபட உள்ளன.