செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் மீதான 18 அவதூறு வழக்குகள்; சென்னை உயர்நீதிமன்றம் ரத்து!

கல்கி

கடந்த அதிமுக ஆட்சியில் திமுக தலைவர் முதல்வர் மு.. ஸ்டாலின் மீது போடப்பட்ட 18 அவதூறு வழக்குகளை இன்று சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் மீது டெண்டர் முறைகேடு, வாக்கிடாக்கி கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்த 18 கிரிமினல் அவதூறு வழக்குகள் தமிழக அரசின் சார்பில் தொடரப்பட்டன. இவை எம்.பி எம்.எல்..க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தன. இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முதல்வர் மு.. ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதித்திருந்தது.

இந்நிலையில் தனக்கு எதிரான அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முதல்வர் மு..ஸ்டாலின் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த 18 கிரிமினல் அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெறுவது தொடர்பான அரசாணை தாக்கல் செய்யப்பட்டது உள்ளிட்ட விபரஙக்ள் தாக்கல் செய்யப்பட்டன்.

.இந்நிலையில் முதல்வர் மு..ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஏற்று, அவர் மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

உடலை இலகுவாக வைக்கும் ஆரோக்கிய உணவுகள்!

காய்கறித் துண்டு, பழத் துண்டு தெரியும்; உளவியல் சொல்லும் மெல்லிய துண்டம் தெரியுமா?

பகுஜன் சமாஜ் கட்சி: மாயாவதியின் அரசியல் வாரிசு?!

Neuroplasticity-இன் அற்புதமான செயல்பாடுகள் பற்றி தெரியுமா?

நிமிடத்துக்கு நிமிடம் மாறி மாறி காட்சி தரும் தமிழகத்தின் மாயாஜால பாலைவனம்!

SCROLL FOR NEXT