ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி கடந்த நான்கு வருடங்களாக சம்பளம் எதுவும் வாங்காமல் வேலை செய்து வருகிறாராம். சம்பளமாக பணம் வருவதில்லைதான். ஆனால்…
பெட்ரோலியம், தொலைத்தொடர்பு உட்பட பல்வேறு துறைகளில் ரிலையன்ஸ் குழுமம் செயல்பட்டு வருகிறது. 1977ம் ஆண்டு முதல் இந்த ரிலையன்ஸ் குழுமம் செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் 2002ம் ஆண்டு திருபாய் அம்பானி இறந்த பின்னர், நிறுவனத்தின் முழு பொறுப்பையும் முகேஷ் அம்பானி ஏற்றுக்கொண்டார். அதுமுதல் ஆண்டுக்கு அவர் 15 கோடி சம்பளமாக பெற்றுக்கொண்டு வந்தார்.
இப்படியான சூழ்நிலையில்தான், கொரோனா வந்து உலகையே உலுக்கியது. அந்த சமயத்தில் அனைத்து நிறுவனமும் சரிவைச் சந்தித்தது. அப்போது ரிலையன்ஸ் நிறுவனத்திலும் பொருளாதார சரிவு ஏற்பட்டது. அந்த சரிவை கருத்தில்கொண்டு முகேஷ் அம்பானி தனக்கு எந்தச் சம்பளமும் வேண்டாம் என்று அறிவித்தார். ஆகையால்தான் கடந்த 4 வருடங்களாக அவர் சம்பளம் எதுவும் வாங்காமல் தனது சொந்த நிறுவனத்திற்கு வேலை செய்து வருகிறார் என்பது தெரியவந்தது.
ஆகையால்தான் தனது மகன் அனந்த் அம்பானி திருமணத்தை மிகவும் எளிமையாக வைத்துவிட்டார் போல.
அது இருக்கட்டும், சம்பளம் இல்லாமல் குடும்பத்தை எப்படி ஓட்டிருப்பார் என்றுதானே யோசிக்கிறீர்கள்?
ரிலையன்ஸ் குழுமத்தில் முகேஷ் அம்பானியின் குடும்பத்துக்கு 50.33 சதவீதம் பங்குகள் உள்ளன. முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு 2023-24-இல் ஈவுத்தொகை மட்டும் ரூ.3,322.7 கோடி கிடைத்துள்ளது. முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி, நிறுவனத்தில் இருந்து ரூ.99 லட்சமும், அவரின் இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் தலா ரூ.1 கோடியும் ஊதியம் அல்லாத பிறவகை பணப் பலன்களாகப் பெற்றுள்ளனர்.
ஆண்டுக்கு 15 கோடி சம்பளம் பெறவில்லை, அப்படியென்றால் நான்கு ஆண்டுகளுக்கு 60 கோடி வருமானம் இல்லை. தற்போது நிறுவனத்தின் சார்பாக விலையேற்றம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், நிறுவனத்தின் மேல் இருக்கும் குடும்ப பங்கின் மூலம் கூடுதல் தொகைப் பெற்றுக்கொள்வார்கள்தானே???
இல்ல… எங்களுக்கு புரில….