செய்திகள்

மும்பை நியூஸ் - பூங்காவில் சிறப்பு வசதிகள்!

மும்பை மீனலதா

மும்பையில் முதன் முதலாக, மாற்றுத் திறனாளி சிறுவர்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் ஜோகேஷ்வரி கிழக்குப் பகுதியில் 55,000 சதுர மீட்டர் பரப்பளவில் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவில் இசை நீருற்று, திறந்தவெளி அரங்கம், சிறுவர் விளையாட்டு பகுதி, பார்க்கிங் வசதி போன்றவைகள் தவிர, கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்குப் புரியும் வகையில் தகவல் பலகைகள், ப்ரெய்லி எழுத்துகளில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் சக்கர நாற்காலிகளில் வந்து செல்ல உதவியாக புதிய சாய்வு தளம், பிரத்தியேக இருக்கை வசதி மற்றும் ஓய்வெடுக்கும் பகுதி ஆகியவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மும்பை மாநகராட்சி, தனியார் தொண்டு நிறுவன உதவியுடன், இதனை மூன்று மாத இடைவெளியில் மேம்படுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதுப்பிக்கப்பட்ட பூங்காவை சமீபத்தில் அமைச்சர் தீபக் கேசர்கர் திறந்துவைத்தார்.

டாய் டிரெயின் அதிக வசூல்!

மாதேரான் – நெரல் இடையே 100 ஆண்டுகளுக்கும் மேலாக Toy Train இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் சேவை மழைக்காலமான ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரையில் முன்னெச்சரிக்கை கருதி நிறுத்தி வைக்கப்படும்.

3 முதல் தரம்; 1 விஸ்டோ டாம், சரக்கு மற்றும் 2 ஆம் தரம் (2 பெட்டிகள்) என 6 பெட்டிகள் இதில் உள்ளன.

தீபாவளியை முன்னிட்டு மீண்டும் துவக்கப்பட்ட டாய் டிரெயினில் 215 பேர்கள் பயணிக்க, மத்திய ரெயில்வேக்கு ` 37,000/- வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

Toy Train Neral இல் இருந்து காலை 8.50 மற்றும் 10.50க்குப் புறப்பட்டுச் செல்லும். மாதேரானிலிருந்து மதியம் 2.45க்கும் மாலை 4 மணிக்கும் புறப்படும்.

என்றுமே Toy Train-க்கு வரவேற்புதான். சிறியவர் முதல் பெரியவர் வரை என்ஜாய் செய்வார்கள்.

வேலை நேரம் தேர்வு!

மும்பையிலுள்ள ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் அலுவலக நேரங்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படும். இதனை தடுப்பதற்காக அனைத்து நிறுவனங்களும், தங்களது ஊழியர்களின் பணி நேரத்தை மாற்றியமைக்க வேண்டுமென அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

முதன்முதலாக இதை செயல்படுத்திய மத்திய ரெயில்வே, மும்பை கோட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் தங்களது பணி நேரத்தை மாற்றிக் கொள்ளலாமென அறிவிப்பு செய்தது. அதாவது “காலை 9.30 முதல் மாலை 5.45 வரை. மற்றும் காலை 11.30 முதல் இரவு 7.45 வரை உள்ள இரண்டு ஷிப்ட்களில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்துகொள்ளலாம். கூட்ட நெரிசலை குறைப் பதற்காகவும் ஊழியர்கள் நலன் கருதியும்  இத்திட்டம் நவம்பர் 1 முதல் அமுல்படுத்தப்பட, மொத்தமுள்ள 1500 ஊழியர்களில், 300 பேர்கள் தங்களுக்கு விருப்பமான ஷிப்டைத் தேர்வு செய்து இருக்கின்றனர்.

இவர்களைத் தவிர, பொருள் மேலாண்மை மற்றும் மக்கள் தொடர்புத் துறையைச் சேர்ந்த பணியாளர்களும் இத்திட்டத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT