செய்திகள்

கொலை வழக்கில் சிறை சென்ற நவ்ஜோத் சிங் சித்து இன்று விடுதலை!

கல்கி டெஸ்க்

ந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து மற்றும் குர்ணாம்சிங் என்பவருக்கிடையே தங்களது வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக கடந்த 1988ம் ஆண்டு பிரச்னை ஏற்பட்டது. வாக்குவாதமாகத் தொடங்கிய இந்த சண்டை கைகலப்பாக மாறி இறுதியில் நவ்ஜோத் சிங் சித்து அவரைத் தாக்கியதில் குர்ணாம்சிங் பலத்த காயங்களோடு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஹரியானா நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து நவ்ஜோத் சிங் சித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்த இந்த வழக்கில் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் தீர்ப்பு வந்தது. அதில், நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நவ்ஜோத் சிங், பட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.

வரும் மே மாதம் 16ம் தேதி வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நவ்ஜோத் சிங் சித்துவின் நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு பாட்டியாலா சிறை துறை அவரை முன்னதாகவே இன்று ஏப்ரல் 1ம் தேதியே விடுதலை செய்வது குறிப்பிடத்தக்கது.

தஞ்சை பெருவுடையார் கோயிலின் 10 ஆச்சரியத் தகவல்கள்!

இந்த 6 அறிகுறிகள் உங்கள் வாழ்க்கையில் இருந்தால் ஜாக்கிரதை!  

11 வாரம் 11 சுற்று பிரதட்சிணம் செய்ய தோஷம் நீக்கி அருளும் சனி பகவான்!

மறந்துபோன இந்த கீரைகளின் மகத்துவம் தெரியுமா?

குள்ள நீர்யானைக் குட்டியும், அரிய வகை டைனோசர் இனமும்! 

SCROLL FOR NEXT