News 5 part 2 
செய்திகள்

News 5

கல்கி டெஸ்க்

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் நீண்ட காலம் பணியாற்றிய ரா. சம்பந்தன் காலமானார்!

Ra sambanthan

முப்பதைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கியப் பங்கு வகித்த இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், இலங்கை தமிழரசு கட்சியின் பெரும் தலைவருமான ரா.சம்பந்தன் காலமானார்(91). இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ஒரு நியாயமான தீர்வைப் பெறுவதற்காக நீண்ட காலம் பணியாற்றியவர் அவர்.

‘கல்கி 2898 AD’ திரைப்படம் மாபெரும் சாதனை!

Kalki 2898 AD

‘கல்கி 2898 AD’ திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் முதல் நாளே ரூ.191.5 கோடி வரை வசூல் செய்திருந்தது. இந்த நிலையில், இப்படம் வெளிவந்த நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 525 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

தண்டவாளத்தை கடக்க முயன்ற இருவர் ரயில் மோதி பலி!

death

திருப்பூர் மாவட்டம் காவிலிபாளையம்புதூர் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். குடவாசல் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் சரவணகுமார் இருவரும் கட்டிட பணிக்காக காவிலிபாளையம்புதூர் வந்த நிலையில் பணியின்போது தண்டவாளத்தை கடந்து டீ குடிக்க சென்று மீண்டும் திரும்பும்போது ரயில் மோதியதாக கூறப்படுகிறது.

மலை கிராம மாணவர்களின் கல்வி கேள்விக்குறியா?

School

உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட மாவடப்பு மலை கிராமத்தில் பள்ளிக்கூடம் இருந்தும் வாரம் ஒருமுறை மட்டும் ஆசிரியர் வருவதால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாக இருந்து வருவதாகவும், சமீபத்தில் கட்டிய பள்ளிக்கட்டடம் தான், ஆனால் சிதைவடைந்து கழிவறையில் தண்ணீர் வசதியில்லாமல் வெறும் மண்தரை மட்டுமே உள்ளதாகவும் பெற்றோர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். 

சூர்ய குமாரின் புதிய Tattoo விருப்பம்!

Surya kumar

“டி20 உலக கோப்பையின் படத்தையும், இந்திய அணி அதனை கைப்பற்றிய தினத்தையும் எனது இதயத்தின் அருகில் பச்சைக் குத்திக்கொள்ள விரும்புகிறேன். ஜூன் 29 எனது தங்கையின் பிறந்தநாள். அதனால் இது அவளுக்கு ஒரு சிறந்த பிறந்தநாள் பரிசாக இருக்கும் என நினைக்கிறேன்” என இந்திய கிரிக்கெட் வீரர்  சூரியகுமார் யாதவ் மகிச்சியுடன் கூறியுள்ளார்.

மிகவும் விலையுயர்ந்த அக்வாரியம் வகை மீன்கள்!

காபியே மருந்தாகும் மாயம் தெரியுமா?

திரைத்துறையில் ஒரு மாபெரும் கவிஞனின் பங்கு!

வருந்தும் மரத்தை தெரிந்து கொள்வோம் வாருங்கள்!

உங்களை மற்றவர்கள் Demotivate செய்வதை எப்படி கையாள வேண்டும் தெரியுமா?

SCROLL FOR NEXT